ஆள்கூறுகள்: 24°43′09″N 73°11′53″E / 24.719217°N 73.198075°E / 24.719217; 73.198075

சேய் அணை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
சேய் அணை
Sei Dam
சேய் அணை நீர்த்தேக்கத்தின் காட்சி
அமைவிடம்கோட்ரா தாலுகா, உதய்பூர் மாவட்டம், இராசத்தான்
புவியியல் ஆள்கூற்று24°43′09″N 73°11′53″E / 24.719217°N 73.198075°E / 24.719217; 73.198075
கட்டத் தொடங்கியது1968-69[1]
இயக்குனர்(கள்)இராசத்தான் அரசு[2]
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுசேய் ஆறு
உயரம்28 மீட்டர்[2]
நீளம்1453 m[2]
வழிகால் அளவுவிநாடிக்கு 1756 கனமீட்டர்கள்[2]
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு31.33 மில்லியன் கன மீட்டர்[3]

சேய் அணை (Sei Dam) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதய்பூர் மாவட்டத்தில் இருக்கும் கோட்ரா தாலுகாவில் சபர்மதி ஆற்றின் துணை ஆறான சேய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.[4] ஒரு மண் ஈர்ப்பு அணையான இது சேய் திருப்பிவிடும் அணை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.[3] அணையின் முதன்மை நோக்கம் பாலி மாவட்டத்தில் உள்ள இயவாய் ஆற்றில் உள்ள இயவாய் அணைக்கு திருப்பி விடப்படும் தண்ணீரை சேமிப்பதாகும்.

அணைக்கட்டு பகுதியில் சேய் ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதி 320 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.[5] சேய் அணையின் கட்டுமானம் 1977 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு ரூ. 4.07 கோடி செலவில் நிறைவடைந்தது.[5][3][6]

உதய்பூர் நகரத்திலிருந்து உதய்பூர்-பிந்த்வாரா சாலையில் சாலை வழியாக சுமார் 90 கி.மீ தொலைவில் சேரி அணை உள்ளது.[7]

மேற்கோள்கள்

  1. Sehgal, K.K. (21 December 1960). Gazetteer of India Rajasthan Pali. Jaipur: Directorate of District Gazetteers. Retrieved 24 May 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "Sei Diversion Dam D00864". Water Resources Information System of India. Retrieved 3 May 2019.
  3. 3.0 3.1 3.2 Sabarmati Basin. Government of India Ministry of Water Resources. 2014. Retrieved 3 May 2019.
  4. Jain, Sharad K; Agarwal, Pushpendra K; Singh, Vijay P (2007). Hydrology and Water Resources of India. Springer. ISBN 9781402051807.
  5. 5.0 5.1 Application Of GIUH And GIS Based Approach For Design Flood Estimation. National Institute of Hydrology. 1998.
  6. Major and Medium Irrigation Projects in India - Completed Projects Compiled Upto End of Ninth Plan Including Ongoing and New Projects of Tenth Plan. Central Water Commission. 2008.
  7. "Sei Dam reservoir and surrounding environs - keybiodiversityareas.org". www.keybiodiversityareas.org. Retrieved 2025-06-19.
"https://tamilar.wiki/w/index.php?title=சேய்_அணை&oldid=372383" இலிருந்து மீள்விக்கப்பட்டது