செல்லப்பா குமாரசுவாமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மேலவை உறுப்பினர்
செ. குமாரசுவாமி
C. Coomaraswamy
இலங்கை செனட் சபை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு (1887-08-25)25 ஆகத்து 1887
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
கொழும்பு றோயல் கல்லூரி
தொழில் குடிமுறை அரசுப் பணியாளர்
இனம் இலங்கைத் தமிழர்

செல்லப்பா குமாரசுவாமி (Chellappah Coomaraswamy, 25 ஆகத்து 1887 - )இலங்கைத் தமிழ் குடிமுறை அரசுப் பணியாளரும். தூதுவரும், முன்னாள் மேலவை உறுப்பினரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

குமாரசுவாமி 1887 ஆகத்து 25 இல் பிறந்தவர்.[1] யாழ்ப்பாணம், ஐயனார்கோவிலடியைச் சேர்ந்த செல்லப்பா என்பவரின் மகன்.[1] குமாரசுவாமி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு றோயல் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.[1]

குமாரசுவாமி நல்லூரைச் சேர்ந்த முதலியார் சபாபதி, மாணிக்க அம்மையார் ஆகியோரின் மகள் மங்கையர்க்கரசி என்பாரைத் திருமணம் புரிந்தார்.[1] இவர்களுக்கு மூன்று மகன்களும் (ராஜேந்திரா, மகேந்திரா, சத்தியேந்திரா), ஒரு மகளும் (சுந்தரேசுவரி) பிறந்தார்கள்.[1]

பணி

குமாரசுவாமி படிப்பை முடித்துக் கொண்டு அரசு எழுதுவினைஞராகப் பணியில் சேர்ந்தார். 1910 ஆம் ஆண்டில் இலங்கை குடிமுறை அரசுப் பணியாளரானார். 1913 ஆம் ஆண்டில் புத்தளத்தில் காவல்துறை நீதிபதியாகவும், மாவட்ட நீதிபதியாகவும், பதிவு ஆணையாளராகவும் பணியாற்றினார். 1933 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியானார். பின்னர் வட மாகாணத்திற்கு அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]

பிற்கால வாழ்க்கை

அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற குமாரசுவாமி 1947 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1][2][3] 1949 முதல் 1951 வரை இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக புது தில்லியில் பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=செல்லப்பா_குமாரசுவாமி&oldid=24418" இருந்து மீள்விக்கப்பட்டது