செரைட்டு
| செரைட்டு Cerite | |
|---|---|
செரைட்டு – பாசுட்னசு – படிவு அசல்வகை | |
| பொதுவானாவை | |
| வகை | சிலிக்கேட்டு கனிமக் குழு |
| வேதி வாய்பாடு | (Ce,La,Ca) 9(Mg,Fe3+ )(SiO 4) 6(SiO 3OH)(OH) 3 |
| இனங்காணல் | |
| நிறம் | கிராம்பு-பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறத்துடன்; மெல்லிய துண்டுகளாக இருக்கும் போது வெளிர் லாவெண்டர்-பழுப்பு நிறத்தில் இருந்து நிறமற்றதாக இருக்கும். |
| படிக இயல்பு | பாரிய மணிகள் |
| படிக அமைப்பு | முக்கோணம் |
| பிளப்பு | இல்லை |
| முறிவு | ஒழுங்கற்றது |
| மோவின் அளவுகோல் வலிமை | 5 to 5.5 |
| மிளிர்வு | பளபளப்பு முதல் பிசின் வரை |
| கீற்றுவண்ணம் | வெள்ளை முதல் சாம்பல் வெள்ளை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் முதல் ஒளிபுகாது வரை |
| ஒப்படர்த்தி | 4.7 முதல் 4.86 |
| ஒளியியல் பண்புகள் | ஒற்றை அச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nω = 1.806 – 1.810 nε = 1.810 – 1.820 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.010 |
| மேற்கோள்கள் | [1][2][3] |
செரைட்டு (Cerite) என்பது (Ce,La,Ca)
9(Mg,Fe3+)(SiO4)6(SiO3OH)(OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பல பாகங்கள் கொண்ட சிலிக்கேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது.[2] சீரியம் மற்றும் இலந்தனம் தனிமங்களின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் Ce நிறைந்த இனங்கள் (செரைட்டு-(Ce)) என்றும் La நிறைந்த இனங்கள் (செரைட்டு-(La)) என்றும் மாறுபடுகின்றன.[4][5] அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள மவுண்டன் பாசு பகுதியிலுள்ள கார்பனடைட்டு பாறையிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரியின் பகுப்பாய்வு 35.05% Ce2O3 மற்றும் 30.04% La2O3 இனத்தையும் கொடுத்தது.[2]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் செரைட்டு கனிமத்தை Crt[6]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
செரைட்டு கனிமம் முதன்முதலில் 1803 ஆம் ஆண்டு சுவீடனின் வெசுட்மேன்லாந்தில் உள்ள பாசுட்னாசில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[3] இலந்தனம் நிறைந்த இனமான செரைட்-(லா) முதன்முதலில் உருசியாவின் கோலா தீபகற்பத்தில் உள்ள கிபினா திரட்சியில் காணப்பட்டதாக விவரிக்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
- ↑ Mineralienatlas
- ↑ 2.0 2.1 2.2 http://rruff.geo.arizona.edu/doclib/hom/ceritece.pdf Handbook of Mineralogy
- ↑ 3.0 3.1 http://webmineral.com/data/Cerite-(Ce).shtml Webmineral (Ce)
- ↑ http://www.mindat.org/min-931.html Mindat Cerite-(Ce)
- ↑ http://www.mindat.org/min-26408.html Mindat Cerite-(La)
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ http://webmineral.com/data/Cerite-(La).shtml Webmineral (La)