சுமன் (நடிகர்)
Jump to navigation
Jump to search
சுமன் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 28, 1959 மங்களூரு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1977 - நடப்பு |
வாழ்க்கைத் துணை | சிறீசா |
சுமன் ஓர் தென்னிந்திய திரைப்பட நடிகர். 1980களில் தெலுங்கு, தமிழ் மலையாள மொழிகளில் அதிரடி திரைப்படங்களிலும் காதல் திரைப்படங்களிலும் நடித்து வந்தார். தெலுங்கில் சித்தாரா, தரங்கணி, நேதி பாரதம் ஆகியன குறிப்பிடத் தக்கன. மலையாள மொழியில் சாகர் அலையசு ஜாக்கி என்ற திரைப்படத்தில் வில்லனாகவும் வரலாற்றுச் சித்திரமான பழசி இராசாவில் பழயம்வீடன் சாந்துவாகவும் நடித்துப் புகழ் பெற்றார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீளவும் நடிக்க வந்தபிறகு 2007இல் வெளியான சிவாஜி: த பாஸ் படத்தில் எதிர்மறை வேடத்தில் நடித்துப் பரவலானப் பாராட்டைப் பெற்றார். குருவி, ஏகன் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.