சுசேதா தலால்
Sucheta Dalal | |
---|---|
Dalal receiving Padma Shri from the President A. P. J. Abdul Kalam in 2006 | |
பிறப்பு | 1962 (அகவை 61–62) Bombay, Maharashtra, India |
படித்த கல்வி நிறுவனங்கள் | |
பணி | Business journalism |
அறியப்படுவது | 1992 Indian stock market scam |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | 1992 securities scam |
வாழ்க்கைத் துணை | Debashis Basu |
விருதுகள் | Padma Shri in 2006 |
வலைத்தளம் | |
moneylife |
சுசேதா தலால் (Sucheta Dalal) (பிறப்பு 1962) ஓர் இந்திய வணிகப் பத்திரிகையாளரும் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.[1] இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக இருந்த இவர், 2006 இல் பத்திரிகைத் துறைக்கான பத்மஸ்ரீ விருதைப் பெற்றார். [2] 1998 ஆம் ஆண்டு வரை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிதி ஆசிரியராக இருந்த இவர் இந்தியன் எக்சுபிரசு குழுமத்தில் ஆலோசனை ஆசிரியராக சேர்ந்தார். பின்னர், 2008 இல் வெளியேறினார். அர்சத் மேத்தாவின் 1992 பங்குச் சந்தை ஊழலை அம்பலப்படுத்தியதற்காக இவர் அறியப்படுகிறார்.
2006 ஆம் ஆண்டில், இவர் தனது கணவர் தேபாசிசு பாசுவால் தொடங்கப்பட்ட முதலீடு குறித்த இரு வார இதழான மனிலைஃப் பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். இவர் இப்போது மனிலைஃப் நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியராக உள்ளார். 2010 இல், இந்தியாவில் மோசமான நிதி கல்வியறிவு காரணமாக, இவரும் இவரது கணவரும் மும்பையை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான மனிலைப் அறக்கட்டளையை நிறுவினர். இவர் பெறுநிறுவன விவகார அமைச்சகத்தின் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்தில் உறுப்பினராகவும் இருந்தார். 1992 ஆம் ஆண்டில், சிறந்த பெண் ஊடகவியலாளர்களுக்கான சமேலி தேவி ஜெயின் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[3]
கல்வி மற்றும் தொழில்
ஜாட் குடும்பத்தில் பிறந்த சுசேதா, பெலகாவியில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். [4] பின்னர் தார்வாட்டில் உள்ள கர்நாடகா கல்லூரியில் இளம் அறிவியல் (புள்ளியியல்) படித்தார். இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைச் சட்டம் மற்றும் முதுகலைச் சட்டம் பெற்ற பயிற்சி பெற்ற வழக்கறிஞர் ஆவார்.[5]
அதைத் தொடர்ந்து, 1984 இல், பார்ச்சூன் இந்தியா என்ற முதலீட்டு இதழில் பணியில் சேர்வதன் மூலம் சுசேதா தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இவர் பிசினஸ் ஸ்டாண்டர்ட் மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் போன்ற செய்தி நிறுவனங்களில் பணியாற்றினார். [6] 1990 களின் முற்பகுதியில், சுசேதா தலால், மும்பையை தளமாகக் கொண்ட முக்கிய செய்தித்தாள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் வணிகம் மற்றும் பொருளாதாரப் பிரிவின் பத்திரிகையாளராக சேர்ந்தார். அங்கு இவர் பல வழக்குகளை விசாரித்தார். அது இறுதியில் பத்திரிகை மற்றும் செயல்பாட்டின் துறைகளில் இவரது முக்கியத்துவத்திற்கு வழிவகுத்தது. இதில் 1992 ஆம் ஆண்டு அர்சத் மேத்தா ஊழல், என்ரான் ஊழல், இந்திய தொழில் வளர்ச்சி வங்கி ஊழல், 2001 ஆம் ஆண்டு கேதன் பரேக் ஊழல் ஆகியவை அடங்கும். தெபாசிசு பாசு, கிரிசு சாந்த், சாந்தனு தீட்சித் மற்றும் பிரத்யும்ன கௌல் போன்ற பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களுடன் இவர் நெருக்கமாக பணியாற்றினார். பின்னர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் நிதி ஆசிரியரானார். [7]
விருதுகள் மற்றும் அங்கீகாரம்
சுசேதாவுக்கு பத்மசிறீ விருது, மீடியா அறக்கட்டளையால் நிறுவப்பட்ட சமேலி தேவி விருது மற்றும் பத்திரிகையில் இவரது சீரிய பணிக்காக பெமினாவின் வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ் விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. [8] அன்சல் மேத்தா இயக்கிய ஸ்கேம் 1992, என்ற ஆவணப்படத் தொடர் இவரும், இவரது கணவர் தெபாசிசு பாசு ஆகிய இருவரும் இணைந்து எழுதிய தி ஸ்கேம் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இது அக்டோபர் 2020 இல் வெளியிடப்பட்டது. மேலும், தலாலின் கதாபாத்திரத்தில் சிரேயா தன்வந்தரி என்பவர் நடித்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Sucheta Dalal, Padma Shri". 27 Jan 2006. http://expressindia.indianexpress.com/news/fullstory.php?newsid=62057.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015. http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf.
- ↑ "Sucheta Dalal: Executive Profile & Biography". https://www.bloomberg.com/research/stocks/people/person.asp?personId=427441019&capId=20990355&previousCapId=&previousTitle=.
- ↑ "St. Joseph's Convent School to celebrate 125 years on Friday". https://www.thehindu.com/news/national/karnataka/St.-Joseph%E2%80%99s-Convent-School-to-celebrate-125-years-on-Friday/article14011851.ece.
- ↑ "Sucheta Dalal". http://www.suchetadalal.com/?id=22554eaf-9c12-1f58-488d55be5cca&base=topbar.
- ↑ Mehrotra, Kriti (2020-11-11). "Sucheta Dalal Now: Where Is Journalist Who Broke Harshad Mehta Story Today?" (in en-US). https://www.thecinemaholic.com/where-is-sucheta-dalal-now/.
- ↑ "Girish Sant memorial lecture 2015". http://www.prayaspune.org/peg/annual-lectures/80-girish-sant-memorial-annual-lecture-2015.html.
- ↑ "Sucheta Dalal Now: Where Is Journalist Who Broke Harshad Mehta Story Today?". https://www.thecinemaholic.com/where-is-sucheta-dalal-now/.