சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள்
நூலாசிரியர் | லூ சுன், தமிழில்: கே கணேஷ் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | சீனம், தமிழ் |
வகை | சிறுகதைகள் |
வெளியீட்டாளர் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., |
வெளியிடப்பட்ட நாள் | மே 2008 |
ஊடக வகை | அச்சுப்பதிப்பு |
பக்கங்கள் | 208 (iv+204) |
ISBN | 978-81-234-2326-5 |
சீன எழுத்தாளர் லூ சுன் சிறுகதைகள் என்பது நவீன சீன இலக்கியத்தின் பிதா என்று போற்றப்படும் லூ சுன் 1924 முதல் 1926 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பை இலங்கை எழுத்தாளர் கே. கணேஷ் தமிழாக்கம் செய்துள்ளார்.
உள்ளடக்கம்
இந்த நூல் லூ சுன் பிப்ரவரி 1924 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 1926 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டங்களில் எழுதிய ஒன்பது வெவ்வேறு சிறுகதைகளின் தொகுப்பு ஆகும். சீன மொழியில் எழுதப்பட்ட இப்படைப்புகளை மூலக்கதையின் உணர்வுகள் அப்படியே வாசிப்பவர்களை சென்றடையும் வண்ணம் இலங்கையின் சிறந்த தமிழ்க் கவிஞரும் இலக்கிய ஆசிரியருமான கே. கணேஷ் அவர்கள் தமிழாக்கம் செய்துள்ளார்.
[லூ சுன்] சிறுகதைகள் முழுவதும் சீன மக்களின் வாழ்வியலும், நம்பிக்கைகளும், அவர்களின் கொண்டாட்டங்களும், சொல்ல இயலா துயரங்களும், பெண்களின் நிலை, சமகால மற்றும் கடந்த கால சமூக சீர்திருத்த சிந்தனைகள் நிறைந்து கிடக்கின்றன. அத்துடன் சீனத்து மக்களின் பலத்தையும் பலவீனங்களையும் தனக்கே உரிய கலை நயத்துடன் இக்கதைகளில் சொல்லி இருக்கிறார் லூ சுன். சிறுகதைகள் முழுவதும் அம்மண்ணில் நிலவும் சமூகச் சூழல், மக்கள் வாழ்க்கை அவர்களின் எண்ண ஓட்டங்களையும் மிக நுட்பமாக விளக்கிச் செல்கிறார். மேல் தட்டு மக்களின் வாழ்க்கையையும் மட்டுமின்றி கீழ்த்தட்டு மக்களின் வாழ்வையும் அவற்றில் நிறைந்துள்ள வலிகளையும் சந்தோசங்களையும் பதிவு செய்கிறார். மக்களின் வாழ்வையும் தாண்டி அங்கு நிலம் பருவ நிலை, வாழும் மற்ற உயிரினங்கள், இயற்கை என அத்தனையும் தனது எழுத்தில் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். ஒவ்வொரு கதையிலும் தனது கருத்துகளை மட்டும் பதிந்து விட்டு செல்லாமல் வாசிப்பவர்களுக்கும் சிந்திக்கும் வாய்ப்பளித்தபடியே அத்தனை கதைகளையும் துவங்குகிறார், முடிக்கவும் செய்கிறார்.
பொருளடக்கம்
இத்தொகுப்பில் பின்வரும் ஒன்பது சிறுகதைகளும் தொகுக்கப்பட்டுள்ளன:
வ.எண் | சிறுகதையின் பெயர் | எழுதிய நாளும் ஆண்டும் |
---|---|---|
01 | புத்தாண்டுப் பலி | பிப்ரவரி 7,1924 |
02 | மதுக்கடையில் | பிப்ரவரி 16,1924 |
03 | ஓர் இனிய குடும்பம் | மார்ச் 18,1924 |
04 | சோப்பு | மார்ச் 22,1924 |
05 | ஒதுங்கி வாழ்ந்தவன் | அக்டோபர் 17,1925 |
06 | கடந்த கால நினைவுகள் | அக்டோபர் 21,1925 |
07 | விவாகரத்து | நவம்பர் 6,1925 |
08 | சந்திரனை நோக்கிப் பாய்ச்சல் | டிசம்பர் 1926 |
09 | பதப்படுத்திய வாள் | அக்டோபர் 1926 |