சிரேயா ரெட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிரேயா ரெட்டி
படிமம்:Sriya Reddy.jpg
பிறப்பு28 நவம்பர் 1983 (1983-11-28) (அகவை 41)
ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது
வாழ்க்கைத்
துணை
விக்ரம் கிருஷ்ணா

சிரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், திரைப்பட நடிகையும் ஆவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் திரைப்படத்தில் நடித்தார்.

சாமுராய் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து, இவர் கிட்டத்தட்ட தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தோன்றினார். அதில் பிளாக் (2004), திமிரு (2006) மற்றும் காஞ்சிவரம் (2008) மற்றும் சாலார்: பகுதி 1 – போர்நிறுத்தம் (2023) ஆகியவை இவரது குறிப்பிடத்தக்கப் படங்களாகும்.[1][2][3][4]

படப்பட்டியல்

ஆண்டு திரைப்படம் பாத்திரத்தின் பெயர் மொழி குறிப்புகள்
2002 சாமுராய் தமிழ் சிறப்பு தோற்றம்
2003 அப்புடப்புடு ராதிகா தெலுங்கு
2004 ப்ளேக் ஆனந்தம் மலையாளம்
19 ரெவொலுஷன்ஸ் ஷிரின் கோலத்துக்கார் ஆங்கிலம்
2005 பரத்ச்சந்திரன் ஐ. பி. எஸ். ஹேமா மலையாளம்
2006 அம்மா செப்பிந்தி ரஜியா தெலுங்கு
ஓராள் மலையாளம்
திமிரு ஈசுவரி தமிழ்
வெயில் பாண்டி தமிழ்
2007 பள்ளிக்கூடம் ஜான்சி தமிழ்
2008 காஞ்சிவரம் அன்னம் வேங்கடம் தமிழ் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
பரிந்துரை, சிறந்த துணை நடிகைக்கான விஜய் விருது
2016 சில சமயங்களில் தமிழ்
2017 அண்டாவ காணோம் சாந்தி தமிழ் படப்பிடிப்பில் உள்ளது
"https://tamilar.wiki/index.php?title=சிரேயா_ரெட்டி&oldid=22758" இருந்து மீள்விக்கப்பட்டது