சின்ன சின்னக் கண்ணிலே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சின்ன சின்னக் கண்ணிலே
இயக்கம்அமீர்ஜான்
இசைசம்பத் செல்வன்
நடிப்புநாசர்
குஷ்பூ
பிரகாஷ் ராஜ்
தலைவாசல் விஜய்
வடிவேலு
சார்லி
வினோதினி
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன சின்னக் கண்ணிலே (Chinna Chinna Kannile) 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் நாசர் நடித்துள்ள இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார். இப்படத்திற்கு சம்பத் செல்வன் இசை அமைத்துள்ளார்.[2][3][4][5]

கதைச்சுருக்கம்

ரதி குஷ்பு ஒரு இசைக் காணொளி இயக்குநர், தன் கணவர் ரவி நாசர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறாள். ரதிக்கு தன் கணவன் ஒரு கொள்ளைக்காரன் எனத் தெரியாது. ரவி தன் கூட்டாளி சபேசனுடன் பிரகாஷ் ராஜ் சேர்ந்து குற்றங்களைச் செய்கிறான். காவல்துறை அதிகாரியான தேவ் (தலைவாசல் விஜய்க்கு) இவர்களைப் பிடிக்கும்படி உத்தரவு வருகிறது. வைரக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் ரவி பிடிபடுகிறான். ஆனால் சபேசன் தப்பித்து விடுகிறான். ரவி காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, வைரங்களைத் தன் வீட்டில் பதுக்கி வைக்கிறான். விசாரணையின் போது ரவி, காவல்துறை அதிகாரியான தேவால் சுடப்படுகிறான். பலமான காயங்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மருத்துவர்களால் அவன் உயிர் பிழைக்கிறான்.

பிறகு, சபேசன் ரவியைக் காண மருத்துவமனைக்கு வருகிறான். வைரங்களைப் பற்றிக் கேட்கிறான். ரவி சரியான தகவல் ஏதும் சொல்லாததால், அவனைக் கொன்று விடுகிறான். சபேசன் வைரங்களைத் தேடுவதற்காக ரவியின் வீட்டிற்குள் நண்பனாக நுழைகிறான். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவைக் குறிக்கிறது.

நடிப்பு

  • ரதியாக குஷ்பு
  • ரவியாக நாசர்
  • சபேசனாக பிரகாஷ் ராஜ்
  • தேவ் ஆக தலைவாசல் விஜய்
  • வேலனாக வடிவேலு
  • பாலனாக சார்லி
  • சர்மிளா வாக மருத்துவர் சர்மிளா
  • மோகன் வி. ராம்
  • எம். பானுமதி
  • ஹம்சாவாக சர்மிளி
  • பிரம்மகுரு
  • கனகராஜன்
  • ரமேஷ்
  • சகாயராஜ்
  • டிங்குவாக மாஸ்டர் வசந்த் சரவணா
  • பிங்கியாக பேபி ஐஸ்வர்யா
  • சுரேஷாக ரகுவண்ணன்
  • பிச்சைக்காரராக முத்துக்காளை
  • ராம்ஜியாக (நடிகர்) ராம்ஜி

இசை அமைப்பு

சின்ன சின்ன கண்ணிலே
சம்பத் செல்வன்
வெளியீடு2000
ஒலிப்பதிவு2000
நீளம்25:46
இசைத் தயாரிப்பாளர்சம்பத் செல்வன்

இப் படத்தின் இசை அமைப்பாளர் சம்பத் செல்வன். இப் படத்தின் 5 பாடல்களை வைரமுத்து, தாமரை, ந. முத்துக்குமரன், ராபர்ட் மற்றும் அமீர்ஜான் எழுதியுள்ளனர்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டது..[6][7]

எண் பாடல் பாடியோர் நேரம்
1 'சின்ன சின்ன கண்ணிலே' உன்னி மேனன் 5:06
2 'சிக்கிடிட்டா நானே' அனுராதா ஸ்ரீராம், சம்பத் செல்வன் 4:22
3 'கானா சூப்பர் கானா' சம்பத் செல்வன் 6:35
4 'கிரீட்டிங்ஸ் கார்டா டெபிட் கார்டா' அனுராதா ஸ்ரீராம், மால்குடி சுபா 4:55
5 'வைகை ஆத்து கரையோரம்' சுவர்ணலதா, சம்பத் செல்வன் 4:48

விமர்சனம்

பாலாஜி பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு நான்குக்கு இரண்டு புள்ளிகள் கொடுத்துள்ளார். திறமையான நடிகர்கள் இருந்தும் வலுவான திரைக்கதை இல்லாததால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்..[5]

மேற்கோள்கள்

  1. "chinna chinna kannile ( 2000 )" இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029134030/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chinna%20chinna%20kannile. 
  2. "Chinna Chinna Kannile (2000) Tamil Movie". spicyonion.com. http://spicyonion.com/movie/chinna-chinna-kannile/. பார்த்த நாள்: 2014-07-16. 
  3. "Filmography of chinna chinna kannile". cinesouth.com இம் மூலத்தில் இருந்து 2006-10-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061029134030/http://cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=chinna%20chinna%20kannile. பார்த்த நாள்: 2014-07-16. 
  4. "Find Tamil Movie Chinna Chinna Kannile". jointscene.com இம் மூலத்தில் இருந்து 2010-05-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100501081956/http://www.jointscene.com/movies/Kollywood/Chinna_Chinna_Kannile/4424. பார்த்த நாள்: 2014-07-16. 
  5. 5.0 5.1 "CHINNA CHINNA KANNILE". bbthots.com இம் மூலத்தில் இருந்து 2014-07-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140725022459/http://www.bbthots.com/reviews/2000/cckannile.html. பார்த்த நாள்: 2014-07-16. 
  6. "MusicIndiaOnline — Chinna Chinna Kannile(2000) Soundtrack". mio.to இம் மூலத்தில் இருந்து 2014-07-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140726093344/http://mio.to/album/29-tamil_soundtracks/15995-Chinna_Chinna_Kannile__2000_/. பார்த்த நாள்: 2014-07-16. 
  7. "Chinna Chinna Kannile Songs". raaga.com. http://www.raaga.com/channels/tamil/album/T0001557.html. பார்த்த நாள்: 2014-07-16. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சின்ன_சின்னக்_கண்ணிலே&oldid=33373" இருந்து மீள்விக்கப்பட்டது