சினிதி மிசுரா
சினிதி மிசுரா | |
---|---|
18 திசம்பர் 2016 அன்று "மியூசிக் இன் தி பார்க்" இந்திரா காந்தி பார்க், புவனேசுவரம் நிகழ்ச்சியில் சினிதி மிசுரா | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | சினிதி மிசுரா |
பிறப்பு | பலாங்கீர், ஒடிசா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, பின்னணி பாடகர் |
தொழில்(கள்) | பாடகர் |
இசைக்கருவி(கள்) | குரல் பாட்டு |
இசைத்துறையில் | 2010–முதல் |
இணையதளம் | snitimishra |
சினிதி மிசுரா (Sniti Mishra) ஓர் இந்தியப் பாடகி ஆவார்.[1] இவர் இந்துசுதானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற பாடகர் ஆவார். மிசுரா ஜீ தொலைக்காட்சி இசை இயல்நிலை தொலைக்காட்சி நிகழ்ச்சியான ச ரி க ம ப சிங்கிங் சூப்பர் நட்சத்திரத்தில் முதன்முறையாக அறிமுகமானார். இவர் மைந்தா-இந்திய சுவீடன் கலப்பு ஜாஸ் இசைக்குழுவான மைண்டாவுடன் தொடர்புடையவர். தாளக் கலைஞர் சிவமணி மற்றும் கிராமி விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜாஸ் இசைக்கலைஞர்-விசைப்பலகை கலைஞர் லூயிஸ் பாங்க்ஸ் ஆகியோருடனும் பணியாற்றியுள்ளார்.[2] இந்தியாவிலும் உலகெங்கிலும் பாரம்பரிய மற்றும் இணைவு கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார். 2016ஆம் ஆண்டிற்கான 'பாஜி ரூத் சம்மன்' விருதை உத்கலா கலாச்சாரச் சங்கம், மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், இவருக்கு வழங்கியது. சினிதி பொருளாதாரத்தில் கல்லூரிக் கல்வியினை முடித்த பின்னர், நிதி மற்றும் கட்டுப்பாட்டில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.
மிசுரா தனது அமெரிக்க இசை சுற்றுப்பயணத்தின் போது, சிகாகோ இந்தியன் குறிப்படத்தினைத் தீர்மானிக்க அழைக்கப்பட்டார். செப்டம்பர் 2013-இல், இவர் ஓர் உலகளாவிய தொண்டு நிறுவனமான காம்பாட் பிளைண்ட்நெஸ் இன்டர்நேஷனலுக்கான நல்லெண்ண விருப்பத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4] 2023ஆம் ஆண்டின் மிகவும் மதிப்புமிக்க தான்சென் சமாரோ, 2022ஆம் ஆண்டில் சவாய் காந்தர்வ பீம்சென் விழாவிலும் இந்துஸ்தானி கயால் நிகழ்த்த சினிதி அழைக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டில் இந்திய அரசு மற்றும் தேசிய ஒளிபரப்பு நிறுவனமான தூர்தர்ஷன் ஏற்பாடு செய்த பன்னாட்டு நிகழ்வில் ஒன்பது வெவ்வேறு நாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
டி. இமான் இசையமைத்த மாவீரன் கிட்டு என்ற தமிழ்த் திரைப்படத்தில் மிசுரா குரல் கொடுத்து தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். மிசுரா புகழ் பெற்ற, மராத்தி பாரம்பரிய மற்றும் காஷ்மீர் பாடல்களைப் பாடுவதில் பெயர் பெற்றவராக மாறினார். இவரது சமீபத்திய காசுமீர் நாட்டுப்புறப் பாடல் "ஹர்முக் பர்தல்" பிரபலமான வலைத் தொடரான தி பேமிலி மேன் இந்தியத் தொலைக்காட்சி தொடர் பாடலாகும். .
ஆரம்பகால வாழ்க்கை
ஒடிசா மேற்குப் பகுதியில் உள்ள பாலங்கிர் மாவட்டத்தில் ஓர் ஒடியா பிராமணக் குடும்பத்தில் சுனிதி மிசுரா பிறந்து வளர்ந்தார். இரண்டு குழந்தைகளில் மிசுரா இளையவர்.
மிசுரா தனது இந்துஸ்தானி பாரம்பரியப் பயிற்சியை குவாலியர் கரானாவின் முனைவர் தாமோதர் ஹோதாவின் சீடரான குரு சிறீ ரகுநாத் சாகுவிடம் பெற்றார். புவனேசுவரத்தில் உள்ள மேலாண்மை மற்றும் தகவல் அறிவியல் நிறுவனத்தில் நிதி மற்றும் நிதிக் கட்டுப்பாட்டில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் 2012-இல் பெற்றார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "About :: Sa Re Ga Ma Pa Singing Superstar" இம் மூலத்தில் இருந்து 23 April 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110423215432/http://srgmpss.zeetv.com/about-show/.
- ↑ "Sniti Mishra sings for a good cause". IndiaPost. 12 September 2013. http://www.indiapost.com/sniti-mishra-sings-for-a-good-cause/.
- ↑ "(CII)". Chicago Indian Icon. http://www.chicagoindianicon.com/judges.php.
- ↑ "Combat Blindness International | A Solution In Sight Since 1984". Combatblindness.org. 13 November 2013. http://www.combatblindness.org/.
- ↑ Sahu, Diana (26 March 2012). "Music is in her genes". The New Indian Express. https://www.newindianexpress.com/education/edex/2012/mar/26/music-is-in-her-genes-352306.html.