சித்தி அமரசிங்கம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
சித்தி அமரசிங்கம் |
---|---|
பிறந்ததிகதி | ஜனவரி 5, 1937 |
பிறந்தஇடம் | திருக்கோணமலை |
இறப்பு | ஜனவரி 2007 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயம், கோணேஸ்வரா இந்துக்கல்லூரி |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | த. தம்பிமுத்து - முத்தம்மா |
சித்தி அமரசிங்கம் (ஜனவரி 5, 1937 - ஜனவரி 2007) என்று அறியப்படும் சி. அமரசிங்கம் திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலைஞரும் சேகரிப்பாளருமாவார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
த. தம்பிமுத்து - முத்தம்மா தம்பதியின் மூத்த மகனாக திருக்கோணமலையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியினை மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார் பின்னர் திருக்கோணமலை இ.கி.ச.இந்துக்கல்லூரியில் கற்றார்.
செயற்பாடுகள்
அ. சச்சிதானந்தம் என்பவரோடு இணைந்து அமரன் ஆனந்தன் என்ற அமைப்பின் கீழ் தமிழில் ROCK-N-ROLL எனும் இசையுடன் கூடிய நடன நிகழ்வை மட்டக்களப்பு, திருக்கோணமலை, கேகாலை போன்ற இடங்களில் மேடையேற்றியுள்ளார்.
1952-இல் யாழ் எனும் கையெழுத்து சஞ்சிகையினை ஆரம்பித்து நடத்தி வந்தார். பிரமீள், சி. சிவசேகரம், புலவர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இச்சஞ்சிகையில் எழுதி பின்னர் பிரபலமான எழுத்தாளர்களாவர்.
1958-இல் கலைவாணி நாடக மன்றத்தினை உருவாக்க பங்களித்த இவர் அமரன் ஸ்கிரீன் என்ற அமைப்பை உருவாக்கி திருக்கோணமலைச் சூழலில் பல்வேறு நாடகங்களை உருவாக்கி அளித்திருந்தார்.
திருக்கோணமலை தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் பெரும் அக்கறை கொண்ட இவர் தனது சிறு வீட்டில் ஏராளமான பழைய ஆவணங்களையும் நூற்களையும் சேகரித்து வைத்திருந்தார். திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதையும் தன் வாழ்நாள் பணியாக கொண்டிருந்த இவர் தனது இறுதிக்காலத்தில் திருக்கோணமலையின் முக்கிய ஆளுமைகள் தொடர்பான நூலொன்றினை எழுதிக்கொண்டிருந்தார்.
ஈழத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த காலப்பகுதியில் எஸ். ஆர். வேதநாயகம் தயாரித்த தென்றலும் புயலும் என்ற திரைப்படத்தில் வினோதன் என்ற நகைச்சுவைப்பாத்திரத்தில் நடித்துமிருந்தார்.[1] அமரசிங்கம் திறமையான வில்லிசைக் கலைஞருமாவார்.
1972-இல் ஈழத்து இலக்கியச் சோலை என்ற பெயரில் ஒரு வெளியீட்டகத்தை ஆரம்பித்து பல்வேறு நூற்களை வெளியிட்டு வந்தார்.
சித்தி அமரசிங்கம் திருக்கோணமலை சிவயோக சமாஜம் மீதும் சுவாமி கெங்காதரானந்தா மீதும் ஆழமான பற்றினை கொண்டிருந்தார்..
இவர் ஈடுபட்ட துறைகள்
- ஆவணப்படுத்தல்
- நாடகம்
- திரைப்படம்
- ஆக்க இலக்கியம்
- பதிப்புத்துறை
- நூல்வெளியீடு
நாடகத்துறை ஈடுபாடு
வானொலி நாடகங்கள்
தொழிலுக்குத் தொழில், கீக்கிரடீஸ் போன்ற நாடகங்களை வானொலிக்காக தயாரித்திருந்தார். இவரது மேடை நாடகமான இராவண தரிசனம் பின்னர் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது.
கலைவாணி நாடக மன்றம்
சித்தி அமரசிங்கத்தினால் உருவாக்கப்பட்ட கலைவாணி நாடக மன்றம் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியது.
- பழிக்குப்பழி
- மனமாற்றம்
- புரடக்ஷன் நம்பர் 12
- Banda comes to town
- வேடன் கண்ணப்பா
- காணிக்கை
- மலர் விழி
- இராவண தரிசனம்
- ஹரிச்சந்திரா
- திருத்தப்படும் தீர்மானங்கள்
மதிவளர் கலாமன்றம் சார்பில்
- நந்திவர்மன் காதலி
- எல்லாம் காசுக்காக
போன்ற நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
இவரது எழுத்துருவாக்கத்திலும் நெறியாள்கையிலும் மேடையேறிய பிற நாடகங்கள்
- கொப்பரணக் கோட்டுக்கிழுப்பான்
- ஸ்டூடியோவில் க்ரேசி போய்ஸ்
- அண்டல் ஆறுமுகம்
- சத்தியவான் சாவித்திரி
- ஊர்த்தவளைகள்
- சொன்னதைச் செய்வான்
அமரன் ஸ்க்ரீன் சார்பில் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.
- குத்துவிளக்கு
- சொப்பன வாழ்வில்
- யமனுக்கு யமன்
இவை மாத்திரமன்றி, கீழைத் தென்றல் கலாமன்றம், திருமறைக் கலாமன்றம் போன்றவற்றோடும் இவர் இணைந்து இயங்கியுள்ளார்.
பல சிங்கள நாடகங்களிலும், ஏனைய நாடகக்கலைஞர்களின் நாடகங்களிலும் இவர் பங்கேற்று நடித்துள்ளார்
இவர் பெற்ற பட்டங்கள்
- கலாபூஷணம்
- கலாவிநோதன்
- கலை விருதன்
வெளியிட்ட நூற்கள்
- ஒற்றைப்பனை (சிறுகதைத் தொகுப்பு)
- கோயிலும் சுனையும் (நாடகத் தொகுதி)
- கயல் விழி (கவிதை நாடகம்)
- சாரணர் புதிய செயற்றிட்டம்
- 93ல் கலை இலக்கிய ஆய்வு (கட்டுரைகள்)
- இராவண தரிசனம் (இலக்கிய நாடகம்)
- கங்கைக் காவியம் (காவியம்)
- கழகப் புலவர் பெ.பொ.சி கவிதைகள்
- சிந்தித்தால் (நற்சிந்தனைக் கதைகள்)
- இரு நாடகங்கள் (நாடகம்)
- திருப்பல்லாண்டு
- கவிதாலயம் (கவிதைத் தொகுப்பு)
- அச்சாக்குட்டி (குழந்தை இலக்கியம்)
- நெஞ்சில் ஓர் நிறைவு (சிறுகதைத் தொகுப்பு)
- காந்தி மாஸ்டர் சிறப்பு மலர்
- கிழக்கில் பூத்த ஞான மலர்
- இலக்கியப் பூந்துணர்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Playwright, youths felicitated in Trincomalee, தமிழ்நெட், 24 சூன் 2005