சாலி பொலிலு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாலி பொலிலு
இயக்கம்வீரேந்திர செட்டி கவூர்
தயாரிப்புபிரகாஷ் பண்டேஸ்வர்
கதைவீரேந்திர செட்டி கவூர்
இசைவி. மனோகர்
நடிப்புதேவதாஸ் கபிகாடு
நவீன் டி பாட்டீல்
போஜராஜ் வமஞ்சூர்
திவ்யஸ்ரீ
அர்சுன் கபிகாடு
அரவிந்து போலார்
சுந்தர் ராய் மந்தரா
சேத்தன் ராய் மானி
நவ்யா
பத்மஜா ராவ்
ஒளிப்பதிவுஉத்புல் வி நாயனார்
வெளியீடு31 அக்டோபர் 2014 (2014-10-31)
ஓட்டம்155 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதுளு மொழி
ஆக்கச்செலவு0.50 கோடி (US$63,000)
மொத்த வருவாய்3 கோடி (US$3,80,000)

சாலி பொலிலு என்ற துளு மொழி திரைப்படத்தின் கதை மற்றும் இயக்குநர் வீரேந்திர செட்டி கவூர். தயாரிப்பாளர் பிரகாஷ் பண்டேஸ்வர். இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் தேவதாஸ் கபிகாடு, நவீன் டி பாட்டீல் (கதாநாயகன்), போஜராஜ் வமஞ்சூர், திவ்யஸ்ரீ (கதாநாயகி), அர்சுன் கபிகாடு, அரவிந்து போலார், சுந்தர் ராய் மந்தரா, சேத்தன் ராய் மானி, நவ்யா மற்றும் பத்மஜா ராவ். ஒளிப்பதிவாளர் உத்புல் வி நாயனார். இசையமைப்பாளர் வி. மனோகர். படத் தொகுப்பாளர் பி வி. மோகன்.

ரூபாய் மூன்று கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், திரையரங்கில் காட்சிப்படுத்தப்படும் கால அளவு 155 நிமிடங்கள் (இரண்டரை மணி நேரம்) ஆகும்.

இத்திரைப்படம் முழு நகைச்சுவை கலந்த சமூகச் சீர்திருத்த காட்சிகளுடனும் நல்ல பொழுது போக்கு அம்சங்களுடனும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. துளு திரைப்படத்துறையில் இந்தப் படம் சாதனை புரிந்துள்ளது.

31 அக்டோபர் 2014 அன்று வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் கர்நாடகா மாநிலத்தின் மங்களூரு திரையரங்கில் 500-வது நாளாக ஓடி சாதனை படைத்துள்ளது.[1][2]கர்நாடகாவில் இதுவரை வேறு எந்த படமும் 500 நாட்கள் ஓடியதில்லை.

இத்திரைப்படம் வேறு இடங்களில் ஐந்து திரையரங்குகளில் 75 நாள்களும், மூன்று திரையரங்குகளில் நூறு நாள்களும் ஓடியுள்ளது.

வசூலில் சாதனை

இத்திரைப்படம் வெளி வந்த மூன்று வாரத்தில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

விருதுகள்

இத்திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் சில;

  • துளு திரைப்பட விழா 2015-இல் சிறந்த திரைப்படத்திற்கான விருது
  • சிறந்த இயக்குநருக்கான விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சாலி_பொலிலு&oldid=38332" இருந்து மீள்விக்கப்பட்டது