சலம் (நடிகர்)
சலம் | |
---|---|
பிறப்பு | பாலகொல்லு, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய ஆந்திரப் பிரதேசம், இந்தியா) | மே 18, 1929
இறப்பு | மே 4, 1989 | (அகவை 59)
பணி | நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1953-1986 |
வாழ்க்கைத் துணை | இரமண குமாரி (இறப்பு 1964) சாரதா (திருமணம்.1972; மணமுறிவு.1984) |
பிள்ளைகள் | 3 |
சலம் (இயற்பெயர்:சிம்காசலம் கொரடா ) (18 மே 1929 – 4 மே 1989) இந்திய திரைப்பட நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். முதன்மையாக தெலுங்குத் திரைப்படங்களிலும், தெலுங்கு நாடகங்களிலும் இவரது படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர்.[1] 1971 இல் இவர் 19 வது தேசிய திரைப்பட விருது வென்ற மட்டிலோ மாணிக்யம் என்ற தெலுங்குத் திரைப்படத்தைத் தயாரித்து நடித்திருந்தார்.[2] 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையில், சலம் ஏறத்தாழ 150 படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்துள்ளார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
இரமணகுமாரியை மணந்த சலம், தனது பெயரை இரமணா சலம் என மாற்றிக்கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இரமண குமாரி 1964இல் தீ விபத்தில் இறந்தார். சலம் பின்னர் [4] 1972 இல் தண்டுருலு கொடுகுலு என்ற தனது முதல் படத்தில் அவருடன் நடித்த ஊர்வசி சாரதாவை மணந்தார். பின்னர் இவர்கள் 1984 இல் விவாகரத்து செய்தனர் [5]
இறப்பு
1989 மே 4 அன்று சலம் இறந்தார். மதுவுக்கு அடிமையானதால், இறுதி நாட்களில் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தயாரிப்பாளர்
- சம்பராலா ராம்பாபு (1970)
- மட்டிலோ மாணிக்யம் (1971)
- பெல்லி சேசி சூப்பிஸ்டாம் (1983)
விருதுகள்
தெலுங்கில் சிறந்த திரைப்படம் (தயாரிப்பாளர்) மட்டிலோ மாணிக்யம்[6][7]
மேற்கோள்கள்
- ↑ Narasimham, M. L. (26 June 2017). "Downpour at the turnstile" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/downpour-at-the-turnstile/article19147367.ece. பார்த்த நாள்: 18 June 2018.
- ↑ "National Film Awards (1971)". gomolo.com. http://www.gomolo.com/9/national-film-awards-1971.
- ↑ "Tollywood most reputed producer Chalam profile and film facts". https://nettv4u.com/celebrity/telugu/producer/chalam.
- ↑ "Sharada goes down the memory lane!". http://www.telugucinema.com/Sharada-goes-down-memory-lane. பார்த்த நாள்: 18 June 2018.
- ↑ "Telugu Actors Whose Marriage Ended With Divorce!". https://www.chitramala.in/telugu-actors-whose-marriage-ended-with-divorce-198342.html. பார்த்த நாள்: 18 June 2018.
- ↑ "National Film Awards, India (1972)". http://www.imdb.com/event/ev0000467/1972/1/.
- ↑ "National Film Awards - 1972" இம் மூலத்தில் இருந்து 4 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180504010756/http://www.hindilyrics.net/awards/national-film-awards-1972.html.