சரண்யா அறிவழகன்
சரண்யா அறிவழகன் இஆப ஷரண்யா அறி | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | தஞ்சாவூர் |
தேசியம் | இந்தியர் |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | இந்திய ஆட்சிப் பணி |
சரண்யா அறிவழகன் (Sharanya Ari) என்பவர் ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஆவார். இவர் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2015ஆம் ஆண்டு நடத்திய இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் அனைத்திந்திய அளவில் 7வது தரத்தினையும் தமிழ்நாடு அளவில் முதல் தரத்தினையும் பெற்றார்.[1] இவரது சிறந்த செயல்திறன் காரணமாக உள்துறை நிர்வாகப் பதவி இவருக்கு ஒதுக்கப்பட்டது. இவர் இந்திய நிர்வாக சேவையின் தமிழ்நாடு நிலை தொகுப்பு அதிகாரியாக 2016ஆம் ஆண்டு முதல் பதவியில் உள்ளார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
சரண்யா தஞ்சாவூரில் பிறந்து சென்னை வசித்து வருபவர் ஆவார்.[3] இவரது தந்தை எம். அறிவழகன் ஓய்வுபெற்ற இந்திய வான்படை அதிகாரி மற்றும் தாய் சத்யா பிரியா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆவார். சென்னையில் உள்ள கேந்திரியா வித்யாலயாவில்[4] பள்ளிக்கல்வியினையும் சென்னை திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகத்தில் (எஸ்.ஆர்.எம்) தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக். படிப்பினையும் முடித்தார்.[5][6] சரண்யா தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி.அதிகாரி விவேஷ் பி சாசுதிரி என்பவரை மணந்தார்.
தொழில்
சரண்யா, 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சில் உதவி செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[7] இதன் பிறகு அம்பத்தூரில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார்.[8] பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.[9][10] பிப்ரவரி 1, 2021 அன்று இவர் தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையாளராகத் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டார். ஜூன் 2021 இல், பெருநகர சென்னை மாநகராட்சியின் மண்டல துணை ஆணையராக (மத்திய) நியமிக்கப்பட்டார்.[11]
மேற்கோள்கள்
- ↑ "IT engineer gets VII rank in Civil Services examination". https://www.thehindu.com/news/cities/chennai/it-engineer-gets-vii-rank-in-civil-services-examination/article8582548.ece.
- ↑ "91st Foundation Course (2016 Batch)". https://www.lbsnaa.gov.in/course/participants_profile.php?cid=17&page=1.
- ↑ "Meet UPSC Topper Sharanya Ari IAS, AIR 7, 2015". https://syskool.com/meet-upsc-topper-sharanya-ari-ias-air-7/.
- ↑ "UPSC Topper Sharanya Ari - AIR 7, CSE 2016". https://byjus.com/free-ias-prep/upsc-toppers-7th-rank-sharanya-ari/.
- ↑ "Civil Services results: Meet the toppers, know their success mantras". https://www.hindustantimes.com/education/follow-your-dreams-elated-civil-services-2015-toppers-share-their-success-mantras/story-iSByDfBCPMbs62EPTAXe8I.html.
- ↑ "ALUMNI AWARD". https://www.srmist.edu.in/alumni-affairs/award.
- ↑ "Sharanya Ari IAS appointed Assistant Secretary- Ministry of Culture, GoI". https://www.indianbureaucracy.com/sharanya-ari-ias-appointed-assistant-secretary-ministry-of-culture-goi/.
- ↑ "Additional Project Officer for Gaja rehab". https://www.newindianexpress.com/states/tamil-nadu/2018/dec/28/addl-project-officer-for-gaja-rehab-1917395.html.
- ↑ "Tmt. Sharanya Ari, I.A.S". https://kanniyakumari.nic.in/whoswho/tmt-sharanya-ari-i-a-s/.
- ↑ "Sharanya Ari IAS transferred as Sub Collector- Padmanabhapuram, TN". https://www.indianbureaucracy.com/sharanya-ari-ias-transferred-as-sub-collector-padmanabhapuram-tn/.
- ↑ "Tamil Nadu government reshuffles IAS officers". 15 June 2021. https://www.thehindu.com/news/cities/chennai/tamil-nadu-government-reshuffles-ias-officers/article34816961.ece.