சமஸ்கிருத இலக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பனையோலையில் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேவி மஹாத்மியம்

சமஸ்கிருத இலக்கியம் என்பது பொ.ஊ. 2 ஆம் நூற்றாண்டு முதல் சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட நூல்களைக் குறிக்கிறது. சமஸ்கிருத இலக்கியத்தின் பல முக்கிய நூல்கள் இந்திய மதங்களுடன் தொடர்புடையவை. அதாவது இந்து மதம், பவுத்தம் மற்றும் சமண மதம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. சமஸ்கிருத இலக்கிய நூல்கள் அவை இந்தியாவில் இயற்றப்பட்டன. சில நூல்கள் மத்திய கிழக்கு அல்லது தென்கிழக்கு ஆசியாவில் இயற்றப்பட்டன. மேலும் சமஸ்கிருத இலக்கியத்தில் மதச்சார்பற்ற அறிவியல் மற்றும் கலைகளை உள்ளடக்கிய படைப்புகள் உள்ளன. சமஸ்கிருத இலக்கியத்தின் ஆரம்பகால படைப்புகள் பல நூற்றாண்டுகளாக வாய்வழி மரபு மூலம் கையெழுத்துப் பிரதி வடிவில் எழுதப்பட்டன.

இலக்கியம்

பண்டைய இந்தியாவில் நாடகங்கள், கவிதைகள் மற்றும் கதைகள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. அவற்றுள் சில பஞ்சதந்திரக் கதைகள், ஹிட்டோபடேஷா, இராஜதரங்கினி, தசாகுமார சரித்திரம், மிருச்சகடிகம், முத்ரா ராக்‌ஷஸம், ரத்னாவளி, நாகநந்தா, பிரியதர்ஷிகம், மத்தவிலாச பிரகாசனம், பைத்தல் பச்சீசி, சிங்காசன பச்சீசி, பாஷா ஸ்வப்னா வசவடத்தம், பஞ்சாட்சரம், பிரஞ்ஞை யெளகந்தராயணம், பிரதிமனதகா, அபிஷேகநாடகம், பாலசரித்திரம், துதவாக்கியம், கர்ணபாரம், துதகடோட்சகம், சாருதத்தா, மத்யமவயோகம், உருபங்கா ஆகும்.

மேலும் காளிதாசரின் விக்ரமாவும் ஊர்வசியும், மாளவிகாவும் அக்னிமித்ராவும், அபிஜஜனசகுந்தலம், ரகுவம்சம்,குமாரசம்பவம், ருதுசம்ஹாரம் மற்றும் மேகதூதா ஆகியவையும் குறிப்பிடத்தக்க சமஸ்கிருத இலக்கியங்களாகும்.

பாணபட்டர் இயற்றிய சாகுந்தலம் மிகச் சிறந்த காதல் இலக்கிய நூலாகும்.

இந்து நூல்கள்

சுருதிகள், வேதங்கள், உபநிஷதங்கள் போன்றவை சமஸ்கிருத இந்து நூல்களாகும். சில அறிஞர்கள் பகவத்கீதை, பாகவத புராணம் மற்றும் ஆகமங்களையும் இந்து நூல்களாக வகைப்படுத்தியுள்ளனர். வேதங்கங்கள், இந்து காவியங்கள், சூத்திரங்கள் மற்றும் சாஸ்திரங்கள், இந்து தத்துவங்களின் நூல்கள், புராணங்கள், காவியம் அல்லது கவிதை இலக்கியங்கள் என பல இந்து நூல்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[1][2][3][4][5] பண்டைய மற்றும் இடைக்கால இந்து நூல்கள் சமஸ்கிருதத்திலும், இன்னும் பல பிராந்திய இந்திய மொழிகளிலும் இயற்றப்பட்டன. நவீன காலங்களில், பெரும்பாலான பண்டைய நூல்கள் பிற இந்திய மொழிகளிலும், சில மேற்கத்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பொது வருடத்தின் தொடக்கத்திற்கு முன்னர் இந்து நூல்கள் வாய்வழியாக இயற்றப்பட்டன.[6][7] கையெழுத்துப் பிரதிகளில் எழுதப்படுவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக பின்னர் அவை மனப்பாடம் செய்யப்பட்டு வாய்வழியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டன. இந்து நூல்களைப் பாதுகாத்து பரப்பும் இந்த வாய்மொழி மரபு ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை என தொடர்ச்சியாக நடைபெறுகிறது.[6][7]

தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்

தமிழ்நாட்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (பொ.ஊ. 571—630) பகவதஜ்ஜுகம் மற்றும் மத்தவிலாச பிரஹாசனா என இரண்டு சமஸ்கிருத நாடக நூல்களை இயற்றினார்.[8]

மதுரா விஜயம் (சமஸ்கிருதம் : मधुरा विजयं), எனும் கமஸ்கிருத கவிதை நூல் பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் கவிஞர் கங்காதேவி எழுதியது. இதற்கு விரா கம்பாரயா சரிதம் என்றும் கவிஞர் பெயரிட்டுள்ளார். இது விஜயநகர சாம்ராஜ்யத்தின் இளவரசரும், புக்கா ராயாவின் இரண்டாவது மகனுமான குமார கம்பண்ணா உதயார் அல்லது இரண்டாம் குமார கம்பண்ணாவின் வாழ்க்கையை விவரிக்கிறது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் மதுரை சுல்தான் படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றை இந்த கவிதை விரிவாக விவரிக்கிறது.[9][10][11]

சமண நூல்கள்

தத்வார்த்த சூத்திரம் என்பது சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட ஒரு சமண உரை நூலாகும்.[12][13] இது சமணம் பற்றிய மிக பழமையான புத்தகங்களில் ஒன்றாகும். சமணத்துறவி வினய் விஜய் எழுதிய சாந்த் சுதரஸ் பாவனா என்பதும் குறிப்பிடத்தக்க சமஸ்கிருத சமண நூலாகும்.[14][15]

நவீன சமஸ்கிருத இலக்கியம்

சமஸ்கிருதத்தில் இலக்கியம் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன.[16] சமஸ்கிருதப் படைப்புகள் மிகக் குறைந்த வாசகர்களைக் கொண்டுள்ளன. தற்கால சமஸ்கிருத கவிஞர்களின் ஒரு தொகுப்பு (1992) எனும் நூல் அறிமுகத்தில் ராதவல்லப் திரிபாதி, சமஸ்கிருத இலக்கியம் தொடர்ச்சியாக எந்த வித தொய்வுமின்றி முன்னகர்ந்து வருகிறது எனக் குறிப்பிடுகிறார். சமகால சமஸ்கிருதப் படைபாளிகள் ஆசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் உள்ளனர். இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் இதுவரை 3000 சமஸ்கிருதப் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மற்ற இந்திய மொழிகளைவிட உயர் தரத்தில் உள்ளதாகக் கருதப்படுகிறது.[17] 1967 ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் தேசிய அகாடமியான சாகித்ய அகாடமி, சமஸ்கிருதத்தில் அந்த ஆண்டு எழுதப்பட்ட சிறந்த படைப்பு படைப்புகளுக்கான விருதைப் பெற்றது. 2009 ஆம் ஆண்டில், சத்யவிரத் சாஸ்திரி இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான ஞான பீட விருதை வென்ற முதல் சமஸ்கிருத எழுத்தாளர் ஆனார்.[18] வித்யாதர் சாஸ்திரி இரண்டு காவியக் கவிதைகள் (மகாகவ்யா), ஏழு குறுகிய கவிதைகள், மூன்று நாடகங்கள் மற்றும் மூன்று புகழ்பெற்ற பாடல்கள் (ஸ்தவன காவ்யா) ஆகியவற்றை எழுதினார், 1962 இல் வித்யவச்சஸ்பதி விருதைப் பெற்றார். வேறு சில நவீன சமஸ்கிருத படைப்பாளர்களில் அபிராஜ் ராஜேந்திர மிஸ்ரா (திரிவே கவி என அழைக்கப்படுகிறார்), ஜகத்குரு ரம்பத்ராச்சார்யா (கவிகுலரத்னா என்று அழைக்கப்படுகிறார்) ஆவர்.

1946 இல் பண்டிட் சூர்யா தேவ் மிஸ்ராவால் எழுதப்பட்ட துருவ் சரித்ரா என்பது சமீபத்தில் வரை அடையாளம் காணப்படாத மற்றொரு பெரிய சமஸ்கிருத காவியமாகும். புகழ்பெற்ற இந்தி மற்றும் சமஸ்கிருத விமர்சகர்களான ஹசாரி பிரசாத் திவீதி, அயோத்தி சிங் உபாத்யாய் ஹரியாத், சூர்யகாந்த் திரிபாதி நிரலா, லால்தார் திரிபாதி பிரவாசி ஆகியோர் இந்நூலை முக்கியமானதெனக் குறிப்பிட்டனர்.[19]

மேற்கோள்கள்

வார்ப்புரு:Rerlist

  1. Dominic Goodall (1996), Hindu Scriptures, University of California Press, ISBN 978-0-520-20778-3, page ix-xliii
  2. Klaus Klostermaier (2007), A Survey of Hinduism: Third Edition, State University of New York Press, ISBN 978-0-7914-7082-4, pages 46–52, 76–77
  3. RC Zaehner (1992), Hindu Scriptures, Penguin Random House, ISBN 978-0-679-41078-2, pages 1–11 and Preface
  4. Purushottama Bilimoria (2011), The idea of Hindu law, Journal of Oriental Society of Australia, Vol. 43, pages 103–130
  5. Roy Perrett (1998), Hindu Ethics: A Philosophical Study, University of Hawaii Press, ISBN 978-0-8248-2085-5, pages 16–18
  6. 6.0 6.1 Michael Witzel, "Vedas and Upaniṣads", in: Flood, Gavin, ed. (2003), The Blackwell Companion to Hinduism, Blackwell Publishing Ltd., ISBN 1-4051-3251-5, pages 68–71
  7. 7.0 7.1 William Graham (1993), Beyond the Written Word: Oral Aspects of Scripture in the History of Religion, Cambridge University Press, ISBN 978-0-521-44820-8, pages 67–77
  8. Mahendravikramavarma Pallava (600AD). Lockwood, Michael; Bhat, Vishnu. eds. Mattavilasa Prahasana The Farce of Drunken Sport. Christian Literature Society. 
  9. Ernst, Carl W. (1992). Eternal garden: mysticism, history, and politics at a South Asian Sufi center (Illustrated ). SUNY Press. பக். 297. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-0884-1. https://books.google.com/books?id=VgIOryEPymcC&pg=RA1-PA297. 
  10. Jackson, William Joseph (2005). Vijayanagara voices: exploring South Indian history and Hindu literature (Illustrated ). Ashgate Publishing. பக். 61–70. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7546-3950-3. https://books.google.com/books?id=PxvDNBc4qwUC&pg=PA61. 
  11. Chattopadhyaya, Brajadulal (2006). Studying Early India: Archaeology, Texts and Historical Issues. Anthem Press. பக். 141–143. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84331-132-4. https://books.google.com/books?id=m38UxgHNonIC&pg=PA141. 
  12. Vijay K. Jain 2011, ப. vi.
  13. Paul Dundas (2006). Patrick Olivelle. ed. Between the Empires : Society in India 300 BCE to 400 CE. Oxford University Press. பக். 395–396. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-977507-1. https://books.google.com/books?id=efaOR_-YsIcC. 
  14. Jaini 1998, ப. 82.
  15. K. V. Mardia (1990). The Scientific Foundations of Jainism. Motilal Banarsidass. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-208-0658-0. https://books.google.com/books?id=T_VCbRgKKNYC. "Quote: Thus, there is a vast literature available but it seems that Tattvartha Sutra of Umasvati can be regarded as the main philosophical text of the religion and is recognized as authoritative by all Jains."" 
  16. Radhavallabh Tripathi, ed. (1992), Ṣoḍaśī: An Anthology of Contemporary Sanskrit Poets, சாகித்திய அகாதமி, ISBN 81-7201-200-4
  17. S. Ranganath (2009), Modern Sanskrit Writings in Karnataka, ISBN 978-81-86111-21-5, p. 7
  18. "Sanskrit's first Jnanpith winner is a 'poet by instinct'". இந்தியன் எக்சுபிரசு. Jan 14, 2009. http://www.indianexpress.com/news/sanskrits-first-jnanpith-winner-is-a-poet-by-instinct/410480/0. 
  19. Mishra, Mayank. Karma ka Pujari. Chandigarh : Unistar Publications, 2010. Print
"https://tamilar.wiki/index.php?title=சமஸ்கிருத_இலக்கியம்&oldid=10664" இருந்து மீள்விக்கப்பட்டது