சமளங்குளம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமளங்குளம் | |
---|---|
ஆள்கூறுகள்: 8°43′1.6″N 80°30′47.9″E / 8.717111°N 80.513306°E |
சமளங்குளம் | |
மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - வவுனியா |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
சமளங்குளம் (Samalankulam) என்பது இலங்கையின் வடமாகாணத்தில், வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர்.
அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் மத்திய பகுதிகளில் உற்பத்தியாகி கிழக்கு, மேற்கு, மற்றும் வடக்குத் திசைகள் நோக்கிப் பாயும் பல ஆறுகளை மறித்து குளங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை தேக்கம் என்ற தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளன. கல்லாற்றை மறித்து பாவற்குளம், அதனைத் தொடர்ந்து மூன்று ஆறுகள் சந்திக்கும் மூன்று முறிப்பில் மற்றும் ஓர் அணைக்கட்டு கட்டி நீர்த்தேக்கம், நாயாற்றை மறித்து தண்ணி முறிப்புக் குளம், பாலியாற்றை மறித்து பாலிக்குளம், பேராற்றை மறித்து மண்மலைக்குளம் (முத்தையன்கட்டு) அதற்கு அடுத்து கருங்கல் தூண்களை அடுக்கி அடுக்குக்கல்லு அணைக்கட்டு கட்டப்பட்டு மற்றும் ஒரு நீர்த்தேக்கம் ஆகியன உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை ஆஙகிலேய வரைபடங்களில் நீர்த்தேக்கம் என்பதற்குப் பதிலாக தேக்கம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வன்னிப் பிரதேசத்திலுள்ள குளங்களை ஆய்வு செய்த திரு. பார்க்கர் இங்கிருந்த நீர்ப்பாசன முறையை பாராட்டியுள்ளார். இந்தக் குளங்கள் ஆறுகளை மறித்துக் கட்டப்பட்டுள்ள முறையும், அவற்றிலிருந்து நீர் பாய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ள துருசுகளும் மிகவும் புராதனமானது எனவும், சிறந்த முறையில் திட்டமிட்டு இவை கட்டப்பட்டுள்ளதாகவும்,
உலகின் வேறெந்தப் பகுதியிலும் இதுபோன்ற நீர்ப்பாசனமுறை இல்லையெனவும் புகழ்ந்துள்ளார். கி.பி.1880 ஆண்டிற்குப் பின்னர் ஆங்கிலேயருடைய நிர்வாக காலத்தில் அநேகமான குளங்களில் இருந்த துருசுகளை மாற்றி, புதிய வகை துருசுகள் கட்டப்பட்டு நீர்ப்பாசன முறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இராவண மகாராசா காலத்தில் ஆற்றங்கரைகளில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டிருந்த இயக்கர்கள் சிவலிங்க வழிபாட்டில் தலைசிறந்தவர்களாக இருந்துள்ளனர். இந்தப் பிரதேசத்தில் உள்ள குளங்கள் அனைத்தும் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் நாகர்கள் கட்டியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. நாகர்கள் குளங்களைக் கட்டி தமது வழிபாட்டுக்காக ஐந்து தலை நாக சிலைகளை அமைத்தனர். இந்த இரண்டு வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தவர்கள் தமது வழிபாட்டிடங்களை தியானம் செய்யும் இடங்களாக மாற்றியிருந்தமை தெளிவாகிறது. சிவலிங்க வழிபாடு மற்றும் நாக வழிபாடு செய்தவர்களுக்கும் இடையில் எந்த வித வேறுபாடுகளும் இருக்கவில்லை. அவர்களுடைய வழிபாட்டிடங்கள் அருகருகே அமைந்துள்ளமை இதனை உறுதி செய்கிறது.
இதற்கு அடங்காப்பற்று-வன்னிப் பிரதேசத்தின் பல மலைக்குன்றுகளில் அமைந்துள்ள தலங்கள் ஆதாரமாக உள்ளன. இந்த இடங்களுக்கு அடுத்திருந்த பிரதேசங்களில் வேடர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. பின்னர் வேடர்கள் இடம் பெயர்ந்து தென்திசை நோக்கி நகர்ந்தார்கள் என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
வவுனியா- ஹொரவப்பொத்தான வீதி வழியாக திருகோணமலைக்கு செல்லும் வீதியில் மடுக்கந்த என்ற கிராமம் இருக்கின்றது. மலைக்குன்று அல்லது மலைக்கருகில் உள்ள நீர்நிலை (மடு) என்ற பொருள்பட சிங்களப் பெயர் உருவாக்கப்பட்டுள்ளமை தெளிவாகிறது. மடுக்கந்த என்ற பெயர் வருவதற்கு முன்னர் இதன் தமிழ்ப்பெயர் மண்டுக்கோட்டை என்பதாகும். நீண்ட ஆய்வுக்குரியது. சிவலிங்கம், நாக வழிபாடு ஆகியன இடம்பெற்ற காலத்தில் பௌத்த சமயப் பரம்பலின் பின்னர், பௌத்த சின்னங்களும் நாகர்குல தமிழ்ப் பௌத்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளமை தெளிவாகிறது. இந்த
ப் பிரதேசத்தின் மலைக்குன்றுகளில் தட்டயமலை, மன்னாகண்டல் மலை, வாவெட்டி மலை, குருந்தனூர் மலை, கும்பகர்ணன் மலை, முதலியாகல்லு மலை, போன்ற பல இடங்களிலுள்ள தொல்லியல் சின்னங்கள் சமய வரலாறுகளின் அடையாளங்களாக இருக்கின்றன. அடங்காப்பற்று வன்னிப் பிரதேசத்தில் சமளங்குளம் என்ற காரணப் பெயரில் குளங்களும் கிராமங்களும் இருந்துள்ளன. மேல்பற்று வடக்கில் காதலியார் சமளங்குளம், உடையார் சமளங்குளம் போன்ற பெயர்களில் குளங்கள் இருப்பதாக 1895ஆம் ஆண்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வவுனியா சமளங்குளம் : ஹொரவப்பொத்தான பிரதான வீதியில் சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்தில் கோவில்குளம் என்ற கிராமம் இருக்கின்றது. இந்தக் கிராமத்தினூடாகச் செல்லும் வீதியில் சின்ன மயிலங்குளம் மகாமயிலங்குளம், சமளங்கும், (எல்லப்பர்) மருதங்குளம் போன்ற பெயர்களில் குளங்கள் இருக்கின்றன. இவற்றில் சின்ன மயிலங்குளம் மகாமயிலங்குளம் ஆகிய குளங்களில் இருந்து வடிந்து பாயும் நீர் சமளங்குளத்திற்கு வடிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கோவில் குளம் ஊடாக எல்லப்பர் மருதங்குளத்திற்கு வீதி அமைப்பதற்கு முன்னர் இந்தக் கிராமங்களுக்கு வவுனியா – கண்டி வீதியிலுள்ள ஈரப்பெரியகுளம் என்ற கிராமத்தின் ஊடாக செல்வதற்கு வீதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமளங்குளம் என்ற பிரதேசம் மக்கள் குடியேற முதலே காணப்பட்டதாகவும், அந்தக் குளத்தின் கீழ் மக்
கள் குடியேற்றப்பட்டதாகவும் வயதில் மூத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கிராமங்களின் பெயர்கள் ஆய்வுக்கு உரியவையாகும். சமளங்குளம் : சமளங்குளத்திலிருந்து வடிந்து பாயும் நீர், குளக்கட்டிற்கு அண்மையில் உள்ள மலைக்குன்று ஒன்றைச் சுற்றி ஈரப்பெரியகுளத்திற்குச் செல்கிறது. சமளங்குளத்திலிலுள்ள இந்த மலைக்குன்றில் புராதன தியான நிலையம் இருந்ததற்கான அடையாளங்கள் இருக்கின்றன. மக்கள் குடியேற்றத்தின் பின்னர் இந்த மலைக் குன்றில் பிள்ளை
யார் கோயில் கட்டப்பட்டுள்ளது. சமளங்குளம் பிள்ளையார் கோயில் பிள்ளையார் கோயில் அமைந்துள்ள மலைக்குன்றின் பின்பகுதியில் சமளங்குளத்திலிருந்து வடிந்து பாயும் நீர் செல்லும் பகுதியில் வயல் வெளி அமைந்துள்ளது. ஆலயத்தின் பின்பகுதி வயல் வெளியை ஒட்டியதாக மலைக்குன்று அமைந்துள்ளது. இதில் சிதைந்துள்ள பல வடிவங்கள் உள்ளன அவை ஆய்வுக்குரியனவாகும். மலைக்குன்று. மலைக் குன்றின் உச்சியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோயிலின் இரண்டு பக்கத்திலும் புராதன வழிபாட்டிடங்கள் இருந்தமைக்கான அடையாளங்கள்
உள்ளன. ஆலயத்தின் வலது பக்கத்தில் உள்ள கட்டடத்தின் முன்பகுதிக்கான சுவர் நாற்சதுர வடிவில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நாற்சதுர மண்டப செங்கல் சுவர் இந்த நாற்சதுர மன்மண்டபத்தில் உள்ள செங்கல் கட்டடப் பகுதி ஊடாகச் சென்று, உள்ளேயுள்ள அடுத்த பகுதிக்குச் செல்வதற்கான வாசல் பகுதி உயரமாகக் கட்டப்பட்டுள்ளது. வாசல் பகுதி இந்த வாசல் பகுதி கருங்கல் பொளிவுகளை அடுக்கிக் கட்டப்பட்டதற்கான அடையாளங்கள் இருக்கின்றன. ஆரம்ப காலத்தில் கட்டப்பட்டதற்கு அடையாளமாக பொளியப்பட்ட தூண் வடிவக் கருங்கற்கள் அடுக்கி கட்டப்பட்டுள்ளமை தெரிகிறது. பொளியப்பட்ட தூண் வடிவக் கருங்கற்கள் கட்டடத்தின் பக்கச் சுவர்களும் பின்பக்கச் சுவர்களும் கருங்கற்களை அடுக்கி கட்டப்பட்டுள்ளன. கருங்கல் சுவர்ப்பகுதியின் மேலே செங்கற்கள் அடுக்கிக் கட்டப்பட்டுள்ளன.
கருங்கல் சுவர்மேல் செங்கல் கட்டடம் கட்டடத்தின் வாசல்படியில் வைக்கப்பட்டுள்ள கருங்கல் படிகள் ஆய்வுக்குரியனவாகும். இவை தூண்கள் வடிவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கருங்கல் பொளிவுகள் கட்டடத்தின் புராதனத்திற்குரிய அடையாளங்களாகும். கருங்கல் படிகள். கட்டடத்தின் உட்பகுதியில் அகலமான கருங்கற் பொளிவுகள் இரண்டு அடுக்கப்பட்டுள்ளன. ஒன்று பெரிதாகவும் மற்றையது சிறியதாகவும் இந்தக் கருங்கற் பொளிவுகள் இருக்கின்றன. இவை பீடங் களாக உபயோகபடுத்தப்பட்டுள்ளமை தெளிவாகிறது. பீட வடிவில் கருங்கல் பொளிவுகள் நான்கு பக்கங்களாகக் கட்டப்பட்டுள்ள தியானத் தலத்தின் உட்பகுதியின் ஒரு மூலையில் சிதைந்த நிலையில் கருங்கல் தூண்
ஒன்று உள்ளன. இவை போன்ற தூண்களின் அடிப்பாகங்கள் இங்கிருப்பதனால் கட்டடத்தின் உட்பகுதியில் கருங்கல் தூண்கள் நிறுத்தப்பட்டிருந்தமைக்கு ஆதாரமாக உள்ளன. சிதைந்த நிலையில் கருங்கல் தூண் இந்த இடத்தில் 1980களுக்கு முன்னர் தொல்லியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது கருங்கல்லால் கட்டப்பட்ட கட்டடத்தின் முன்பகுதியில் இருந்த மண்டபத்தின் செங்கற்கள் அகற்றப்பட்டதாகவும், பின்னர் அவை இருந்த நிலையிலேயே திரும்ப கட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாற்சதுரமான மண்டபத்தின் மூலைப்பகுதிகள் மிகவும் செம்மையாகக் கட்டப்பட்டுள்ளன. செங்கல்கட்டு மூலைப்பகுதி இந்த மண்டபத்தை கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள செ
ங்கற்கள் ஆய்வுக்குரியனவாகும். ஏனைய இடங்களில் இருப்பது போன்று, இவற்றின் அளவுகள் ஆய்வுக்குரியனவாகும். இவை அகலமானவையாகவும் மிகவும் பலமுள்ளவையாகவும் காணப்படுகின்றன. சிதைந்த செங்கல் இந்தக் கட்டடத்தின் பின்பகுதியில் கீழிறங்கிச் செல்வதற்கு படிக்கட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரோடைக்குச் செல்வதற்கு இந்தப்படிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிள்ளையார் கோயிலின் இடது பக்கத்தில், வழக்கமாக வைரவர்சாமி அமைக்கும் இடத்தில் கல்லொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள கல் குளங்களைக் கட்டிய நாகர்கள் ஐந்து தலை நாகத்தை வழிபட்டார்கள் என்பது வரலாறு. எமது ஆய்வின்போது, இந்தப் பிரதேசத்தில் ஐந்து தலை நாகத்தின் வடிவச் சிலைகள் பல கிடைத்துள்ளன. இந்தக் கல்லிலும் ஐந்துதலை நாகத்தின் உருவம் சிதைந்த நிலையில் இருப்பது வரலாற்றிற்குத் தேவையான முக்கிய அம்சமாகும். சிதைந்துள்ள ஐந்துதலை நாக சிலை.
(-வரலாறும் ஆய்வும் தொடரும்)
கோவில்கள்
- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலயம்
- சமளங்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில்
- புனித குழந்தைஜேசு தேவாலயம்-சமளங்குளம்
பாடசாலைகள்
- சமளங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
சமூக அமைப்புகள்
- சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம்
- சமளங்குளம் யுரேனஸ் விளையாட்டு கழகம்