சங்குவாங் கோவில்
Candi Cangkuang | |
---|---|
கங்குவாங் கோயில் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | Candi |
நகரம் | Garut Regency, West Java. |
நாடு | இந்தோனேசியா |
ஆள்கூற்று | 7°06′11″S 107°55′09″E / 7.1030751°S 107.9190392°E |
கங்குவாங் (Cangkuang) (Indonesian: Candi Cangkuang) என்பது ஒரு சிறிய அளவிலான 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சைவக் கோயில் (இந்து மதம் கோயில்) ஆகும். இக்கோயில் இந்தோனேஷியாவில் மேற்கு ஜாவாவில் கரூட் ரீஜென்சியில் கேகமாடான் லீலீஸ் என்னுமிடத்தில் கங்குவாங்கில் கும்பங் புலோ கிராமத்தில் அமைந்துள்ளது.[1] மேற்கு ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகக் குறைந்த இந்து- பெளத்தக் கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாகும், மற்ற கோயில்களில் பட்டுஜயா மற்றும் போஜோங்மென்ஜே கோயில் ஆகியவை அடங்கும்.
இந்தக் கோவிலின் தெற்குப் பகுதியில் மூன்று மீட்டர் தொலைவில் எம்பா தலீம் ஆரிப் முஹம்மது என்ற பெயரிலான ஒரு பண்டைய இஸ்லாமிய கல்லறை உள்ளது. அது கங்குவாங் பகுதியில் 17ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியமாக்குதலின்போது அந்த கிராமத்தில் வாழ்ந்த மூத்தோர்களுடையது என்று நம்பப் படுகிறது.
அமைவிடம்
இந்த கிராமம் கரூட் செல்லும் வழியில் பாண்டுங் என்னுமிடத்திலிருந்து சுமார் 40 கிமீ தென்கிழக்கு திசையில் உள்ளது. இந்தக் கோயில் இலீலீ-கருட் முதன்மைச் சாலையில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கோயில் கம்போங் புலோ( "தீவின் கிராமம்") என்றழைக்கப்பட்ட 16.5 ஹெக்டேர் தீவில் ஒரு சிறிய ஏரியால் சூழப்பட்டு (சிட்டு) அமைந்துள்ளது. கோயிலுக்கு அருகில் ஒரு பாரம்பரிய சூடானிய கிராமம் உள்ளது. கோயில், கல்லறை, பாரம்பரிய கிராமம் மற்றும் தீவு மற்றும் ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவை இது ஒரு பண்பாடு மற்றும் தொல்பொருள் சரணாலயம் என்பதை மெய்ப்பிக்க வைக்கின்றன.முதலில் தீவு முழுவதும் ஏரியால் சூழப்பட்டிருந்தது, இருப்பினும் தற்போது கிராமம் வடக்கு பகுதிகளில் மட்டுமே உள்ளது, ஏரியின் தெற்கு பகுதிகள் மீட்கப்பட்டு நெல் வயலாக பயிரிடப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன கோயிலின் பெயர் கன்குவாங் என்பது பாண்டன் சூடானிய மொழியில் மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். கம்புங் புலோ தீவைச் சுற்றி இவ்வகையான மரங்கள் காணப்படுகின்றன.
விளக்கம்
இந்த கோயில் ஆண்டிசைட் கற்களால் ஆனது. கோயிலின் அடித்தளம் 4.5 x 4.5 மீட்டர் ஆகும். இக்கோயிலின் உயரம் 8.5 மீட்டர் ஆகும். கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, கிழக்கு பக்கத்தில் போர்ட்டலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் விமானமும் ஒரு சிறிய முதன்மை அறையும் (கர்ப்பக்கிருகம்) உள்ளன. முதன்மை அறைக்குள் சிவனின் 62 செ.மீ உயரமான கல் சிலை உள்ளது. அந்த சிலை சேதமடைந்துள்ளது, கைகள் உடைக்கப்பட்டு முகம் மிகவும் அரிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. சிலையின் பீடத்தில் நந்தியின் தலையில் ஒரு செதுக்குதல் உள்ளது. இந்த கோயில் மிகவும் எளிமையானது. குறைந்த அளவிலான ஆபரணங்களே காணப்படுகின்றன. கூரைப்பகுதி லிங்கம் உச்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று பின்புறப் படிக்கட்டுகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை பாணி ஆரம்பகால மத்திய ஜாவானிய இந்து கோவில்களைப் போன்றது. கல் சிதைவு மற்றும் கோயிலின் எளிமையான பாணியியை நோக்கும்போது இந்த கோயில் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததது என்றும், டயங் கோயில்கள் அதே காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்றும், தெற்கு மத்திய ஜாவாவின் பிரம்பானான் போன்ற கோயில்களைக் காட்டிலும் சற்று பழமையானது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
குறிப்புகள்
- ↑ "Candi Cangkuang". Perpustakaan Nasional Republik Indonesia இம் மூலத்தில் இருந்து 5 March 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130305065040/http://candi.pnri.go.id/jawa_barat/cangkuang/cangkuang.htm.
மேற்கோள்கள்
- பாம்பாங் புடி உட்டோமோ. 2004. அர்சிடெக்தூர் பங்கூனன் சுசி மாஸா இந்து-புத டி ஜாவா பாரத் . கெமென்ட்ரியன் கெபுடயான் டான் பரிவிசாதா, ஜகார்த்தா. ISBN 979-8041-35-6 ஐஎஸ்பிஎன் 979-8041-35-6