சக்தி (பெண்கள் இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சக்தி
இதழாசிரியர் தயாநிதி
துறை பெண்களுக்கான இதழ்
வெளியீட்டு சுழற்சி
மொழி தமிழ்
முதல் இதழ் ஓகஸ்ட் 1990
இறுதி இதழ்
இதழ்கள் தொகை
வெளியீட்டு நிறுவனம்
நாடு நோர்வே, ஒஸ்லோ
வலைப்பக்கம்

சக்தி நோர்வேயில் இருந்து வெளிவரும் பெண்களுக்கான தமிழ் இதழ்.

முதல் இதழ்

சக்தியின் முதலாவது இதழ் மைத்திரேயி போன்ற சில பெண்களின் முழு முயற்சியால் நோர்வே, ஒஸ்லோவில் ஓகஸ்ட், 1990 இல் வெளிவந்தது. தொடர்ந்த இதழ்கள் சுகிர்தா, லிட்டா இராசநாயகம் போன்றோரின் பங்களிப்புகளுடன் வெளிவந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட காலத்துக்கு மேல் சக்தியைத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டு சக்தியின் வரவு நின்று போக, சக்தியுடன் இணைந்த பணியாற்றிய தயாநிதி அதனைப் பொறுப்பேற்று சக்தியை வெளியிட்டுக் கொண்டிருந்தார். பின்னர் புலம்பெயர்ந்த பெண்கள் பலரின் பங்களிப்புகளுடன் சக்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது.

பணிக்கூற்று

சக்தி பல புதிய பெண் எழுத்தாளர்களை அறிமுகம் செய்திருக்கிறது. தங்களை எழுத்தாளர்களாக அடையாளப்படுத்துவதற்காகவும், தாம் கூற விரும்புவற்றை கூறுவதற்கான களமாகவும் பல பெண்களுக்கு சக்தி அமைந்திருக்கிறது. ஆண் எழுத்தாளர்களின் கட்டுரைகளும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்ற போதும் பெண்களின் கட்டுரைகள் போதுமானதாக இருக்கும் பட்சத்தில் ஆண்களின் கட்டுரைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட மாட்டாது எனும் கருத்தை சக்கதியின் ஆசிரியர் குழு கொண்டுள்ளது.

முகப்பட்டை

உள்ளடக்கம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சக்தி_(பெண்கள்_இதழ்)&oldid=9294" இருந்து மீள்விக்கப்பட்டது