கோவை (இலக்கியம்)
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கியத்தில் கோவை என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. அகப்பொருள் பாடல்கள் தொகை நூல்களில் மிகுதியாக இடம் பெற்று விளங்கியபோதும், துறைகள் எல்லாம் தேர்ந்து, நூல் ஒன்று புனைய வேண்டும் என்ற அவாவே "கோவை" இலக்கியம் தோன்றக் காரணம் எனலாம்.
ஐந்திணை நெறி வழுவாது அகப்பொருள் தழுவி, கற்பு என்ற பிரிவமைத்து 400 கட்டளைக் கலித்துறைகளால் பாடப்படுவது கோவை எனும் சிற்றிலக்கியம். இதன் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறுக்கின்றன.
முதலில் தோன்றிய கோவை இலக்கியம், திருக்கோவையார்.
அதைத் தொடர்ந்து பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை, குலோத்துங்க சோழன் கோவை, அம்பிகாபதிக் கோவை, குளத்தூர் கோவை முதலியன எழுந்தன.
"நாணிக்கண் புதைத்தல்" என்ற ஒரே துறையை அடிப்படையாகக் கொண்டு "ஒரு துறைக்கோவை" என்னும் நூல் பின்பு தோன்றியது.
உசாத்துணை
- தூண்டா விளக்கனையாய்![தொடர்பிழந்த இணைப்பு], இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி, நவம்பர் 15, 2009