கோவிலூர் செல்வராஜன்
Jump to navigation
Jump to search
கோவிலூர் செல்வராஜன் | |||
---|---|---|---|
முழுப்பெயர் | ராசையா | ||
செல்வராஜன் |
கோவிலூர் செல்வராஜன் (Koviloor Selvarajan) ஒரு ஈழத்து பாடகர், நடிகர், கவிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர். இவரது இயற்பெயர் செல்வராஜன் ராசையா. இவரது முதலாவது சிறுகதை விடியாத இரவுகள்
இவர் பற்றி
இவர் இலங்கை வானொலியில் பல நாடகங்களில் பங்கேற்று நடித்துள்ளார். வானொலிப் பாடகராக இருந்ததோடு, இசையமைப்பாளராகவும் திகழ்ந்தார். இலங்கை வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் விளங்கினார். தினகரன் பத்திரிகையில் இவரது படகுத்துறை – 1975, லாவண்யா ஒரு முற்றுப்புள்ளி – 1978, இளமைக் கோவில் ஒன்று – 1977 ஆகிய நாடகங்களை எழுதினார். சிந்தாமணி, வீரகேசரி, லண்டன் - மேகம், நோர்வே – பறை, பாரிஸ் - ஈழநாடு, ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.
வெளிவந்த நூல்கள்
விருதுகள்
- புலம்பெயர்ந்தோருக்கான தந்தை செல்வா விருது
- மெல்லிசைக் கவிஞன் என்னும் பட்டம் - ஜேர்மனி தமிழ் மன்றம் - 1999
- விடியாத இரவுகள் - லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு, பணமுடிப்பும் - 1999