கோவர்த்தனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கோவர்த்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவை குறுந்தொகை 66, 194 ஆகியவை. இரண்டுமே முல்லைத்திணைப் பாடல்கள்.

  • பாடல் சொல்லும் செய்திகள்

குறுந்தொகை 66

மாரிக்காலத்தில் பூக்கும் கொன்றைப்பூ பூத்துக் குலுங்குகிறது. தலைவி மாரிக்காலம் வந்துவிட்டது . மாரிக்காலம் வருமுன் வந்துவிடுவேன் என்று சொல்லிச் சென்ற அவர் இன்னும் வரவில்லையே என்று கலங்குகிறாள். தோழி அவளைத் தேற்றுகிறாள். இது மாரிக்காலம் அன்று. மாரிக்காலம் போலப் புதுமையாகப் பொழிந்த மழைக்காலம். (பருவம் அல்லாத காலத்தில் பொழிந்த மழை) உண்மையான மாரிக்காலம் வந்ததும் அவர் வந்துவிடுவார். கவலைப்பட வேண்டாம் என்கிறாள். (தோழி சொல்வதி பொய்யான ஆறுதல் மொழி)

குறுந்தொகை 194

  • இந்தப் பாடலில் தலைவி தோழியிடம் சொல்கிறாள். வானம் மின்னுகிறது. மயில் ஆடுகிறது. இதை மாரிக்காலம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? - என்கிறாள் தலைவி.
"https://tamilar.wiki/index.php?title=கோவர்த்தனார்&oldid=12439" இருந்து மீள்விக்கப்பட்டது