கோபாலகிருஷ்ணன் நாகப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாண்புமிகு
கோபால கிருஷ்ணன் நாகப்பன்
Yang Berhormat
Gobalakrishnan Nagapan
Yb Gobalakrishnan at United Nation.jpg
பாடாங் செராய், கெடா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
8 மார்ச் 2008 – 5 மே 2013
முன்னவர் லிம் பீ காவ்
பின்வந்தவர் நா. சுரேந்திரன்
தனிநபர் தகவல்
பிறப்பு 23 மார்ச்சு 1960 (1960-03-23) (அகவை 64)
சித்தியவான், பேராக், மலேசியா)
அரசியல் கட்சி மஇகா (1985–1998) (2017–தற்போது)
சுயேச்சை (2011–2017)
பிகேஆர் (1999–2011)
வாழ்க்கை துணைவர்(கள்) வசந்தி ராமலிங்கம்
பிள்ளைகள் 3
இருப்பிடம் Kulim Hi-Tech
பணி அரசியல்வாதி
இணையம் www.mppadangserai.com

கோபாலகிருஷ்ணன் நாகப்பன் அல்லது நா. கோபாலகிருஷ்ணன் (ஆங்கிலம்: Gobalakrishnan Nagapan அல்லது N. Gobalakrishnan; மலாய்: Gobalakrishnan Nagapan; சீனம்: 哥巴拉克里斯南·纳加班) (பிறப்பு: 23 மார்ச் 1960) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; 2008 முதல் 2013 வரை மலேசியா கெடா மாநிலத்தின் பாடாங் செராய் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1]

2008-ஆம் ஆண்டு, பாக்காத்தான் ராக்யாட் (Pakatan Rakyat) எதிர்க் கூட்டணியின் மக்கள் நீதிக் கட்சியில் (People's Justice Party) (பிகேஆர்) உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2011-ஆம் ஆண்டில் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து வெளியேறி தன்னை ஒரு சுயேச்சையாக அறிவித்துக் கொண்டார்.[2] இருப்பினும் 2017 மே 8-ஆம் தேதி மலேசிய இந்திய காங்கிரசு (மஇகா) கட்சியில் சேர்ந்தார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

கோபாலகிருஷ்ணன் நாகப்பன், 1960-ஆம் ஆண்டில் பேராக், சித்தியவான் நகரில் பிறந்தவர். முன்னாள் மலேசிய தடகள வீராங்கனையான (Former Malaysian National Athlete) வசந்தி ராமலிங்கம் (Vasanthi Ramalingam) என்பவரை மணந்த இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.[4]

சர்ச்சை

செப்டம்பர் 2009-இல், மலேசியக் காவல்துறை அதிகாரி ஒருவரைப் பணி செய்வதில் இருந்து தடுத்து நிறுத்தியதற்தாகக் கோபாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.[5] அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு RM 3,000 அபராதம் விதிக்கப்பட்டது.[6]

டிசம்பர் 2010-இல், பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வர் இப்ராகீமிற்கு எதிராகப் பேசினார். அன்வர் இப்ராகீம் தன் மகள் நூருல் இசா அன்வாருக்கு (Nurul Izzah Anwar) தனிச்சலுகை காட்டுவதாகக் கோபாலகிருஷ்ணன் கருத்துரைத்தார்.[7] 2011 சனவரி மாதம் அவர் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து விலகி ஒரு சுயேச்சையாகச் செயல்பட்டார். அத்துடன் அரசு சாரா ஓர் அமைப்பை உருவாக்கும் திட்டத்தையும் அறிவித்தார்.[8]

மலேசியப் பொதுத் தேர்தல் 2018

2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக அவர் பாடாங் செராய் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். ஏற்கனவே அவர் பாரிசான் நேசனல் கூட்டணியில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார்.

இருப்பினும் அவருடையை கோரிக்கையை பாரிசான் நேசனல் கூட்டணி நிராகரித்து விட்டது. எந்த ஒரு கட்சியின் சார்புநிலை இல்லாமல் 2013-ஆம் ஆண்டு மலேசியப் பொதுத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவர் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவான வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையையும் இழந்தார்.[9][10]

நீதிமன்ற வழக்கு

ஏப்ரல் 2019-இல், வழக்கறிஞரும்; மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் (Malaysian Bar) முன்னாள் தலைவருமான மஞ்சீத் சிங் தில்லான் (Manjeet Singh Dhillon) என்பவரை அவதூறு செய்ததற்காக RM 150,000 இழப்பீடாகவும், RM 5,000 செலவாகவும் வழங்க வேண்டும் என்று புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.[11]

தேர்தல் முடிவுகள்

மலேசிய மக்களவை[9][12][13]
ஆண்டு தொகுதி வேட்பாளர் வாக்குகள் % போட்டியாளர் வாக்குகள் % வாக்கு பெரும்பான்மை வாக்களித்தவர்கள்
2004 மலேசிய பொதுத் தேர்தல் P076 தெலுக் இந்தான், பேராக் நா. கோபாலகிருஷ்ணன் (பி.கே.ஆர்) 6,128 18.12% மா சியூ கியோங் (கெராக்கான்) 18,870 55.78% 35,082 10,041 66.11%
ஊ கிம் வென் (ஜ.செ.க) 8,829 26.10%
2008 மலேசிய பொதுத் தேர்தல் P017 பாடாங் செராய், கெடா நா. கோபாலகிருஷ்ணன் (பி.கே.ஆர்) 28,774 62.81% போயி சின் கன் (ம.சீ.ச) 17,036 37.19% 47,124 11,738 79.58%
2013 நா. கோபாலகிருஷ்ணன் (சுயேச்சை) 390 0.62% நா. சுரேந்திரன் (பி.கே.ஆர்) 34,151 54.07% 64,584 8,437 87.16%
எங் சீய் கீ (ம.சீ.ச) 25,714 40.71%
அமிதி அபு அசன் (பெர்ஜாசா) 2,630 4.16%
ஒசுமான் வாவி (சுயேச்சை) 279 0.44%

மேற்கோள்கள்

  1. Nalla rapped for changing tune, Nalla Retto, 8 January 2008, MalaysiaKini
  2. "Gobalakrishnan a/l Nagapan, Y.B. Tuan". Parliament of Malaysia. http://www.parlimen.gov.my/index.php?modload=ahlidewan&uweb=dr&action=details&id=7. பார்த்த நாள்: 23 May 2010. 
  3. "Ex-MP Gobalakrishnan rejoins MIC after 18 years". Bernama (Free Malaysia Today). 8 May 2017. https://www.freemalaysiatoday.com/category/nation/2017/05/08/ex-mp-gobalakrishnan-rejoins-mic-after-18-years/. பார்த்த நாள்: 9 May 2017. 
  4. "YB.N.Gobalakrishan's Biodata" இம் மூலத்தில் இருந்து 15 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100615033442/http://www.mppadangserai.com/index.php?pr=About_Me. பார்த்த நாள்: 23 May 2010. 
  5. Sivanantha Sharma, M. (28 September 2009). "Padang Serai MP Gobalakrishnan arrested over 2004 case". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2009/9/28/nation/20090928134438&sec=nation. பார்த்த நாள்: 21 December 2009. 
  6. "Padang Serai MP Gobalakrishnan fined RM3,000 for obstructing cop (Updated)". The Star (Malaysia). 14 May 2010. http://thestar.com.my/news/story.asp?file=/2010/5/14/nation/20100514152129&sec=nation. பார்த்த நாள்: 14 May 2010. 
  7. "PKR's Gobala gets show cause letter; wants Anwar out". The Star (Malaysia) (Star Publications). 4 January 2010. http://thestar.com.my/news/story.asp?file=/2011/1/4/nation/20110104143132&sec=nation. பார்த்த நாள்: 4 January 2011. 
  8. S. Arulldas (29 January 2011). "Padang Serai MP Gobala quits PKR". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2011/1/29/nation/20110129120644&sec=nation. பார்த்த நாள்: 29 January 2011. 
  9. 9.0 9.1 "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri". Election Commission of Malaysia. http://semak.spr.gov.my/spr/laporan/5_KedudukanAkhir.php. பார்த்த நாள்: 23 May 2010. 
  10. "Gobalakrishnan wants to contest Padang Serai seat on BN ticket". Bernama. 10 April 2013. http://english.astroawani.com/news/show/gobalakrishnan-wants-to-contest-padang-serai-seat-on-bn-ticket-11863. பார்த்த நாள்: 8 December 2014. 
  11. V Anbalagan (4 April 2019). "Ex-MP Gobalakrishnan to pay RM150,000 for defaming ex-Bar president". Free Malaysia Today. https://www.freemalaysiatoday.com/category/nation/2019/04/04/ex-mp-gobalakrishnan-to-pay-rm150000-for-defaming-ex-bar-president/. பார்த்த நாள்: 5 April 2019. 
  12. "Malaysia General Election". undiinfo Malaysian Election Data (Malaysiakini). http://undi.info/#. பார்த்த நாள்: 4 February 2017. 
  13. "KEPUTUSAN PILIHAN RAYA UMUM 13". Sistem Pengurusan Maklumat Pilihan Raya Umum (Election Commission of Malaysia) இம் மூலத்தில் இருந்து 1 மே 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170501124349/http://resultpru13.spr.gov.my/module/keputusan/paparan/paparan_laporan.php. பார்த்த நாள்: 24 March 2017. 

மேலும் காண்க

வெளி இணைப்புகள்