கொடிநிலை
Jump to navigation
Jump to search
கொடிநிலை என்னும் துறைபற்றித் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
இக்காலத்தில் கோயில் விழாக்களைக் கொடியேற்றத்துடன் தொடங்குவர். இதனைத் தொல்காப்பியம் கொடிநிலை எனக் குறிப்பிடுகிறது. [1]
பாடாண்திணை எட்டு வகைப்படும். [2]
அவற்றில் முதல் ஆறு துறைகள் [3] அமரர்கண் முடியும். [4]
அமரர் என்போர் தெய்வநிலை எய்திய பெருமக்களும், தெய்வங்களும் ஆவர்.
கடவுள் மேலும், வேண்டியவர் மேலும் காமம் கொள்ளல் பின்னைய இரண்டு. அவை காமப்பகுதி [5] எனப்படும். [6]
காமப்பகுதி அவர்களைக் குழந்தையாக்கியும் [7] ஊரொடு தோற்றம் செய்தும் [8] இரு வகையில் பாடப்படும். தொல்காப்பியம் 3-81,82
கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய மூன்றும் கடவுள் வாழ்த்தோடு ஒப்ப வைத்து எண்ணப்படும்.
புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம்
- தொல்காப்பியம் அகத்திணை 7, புறத்திணை 7 எனப் பகுத்துக்காட்டியதை மாற்றிப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் புறத்திணையை 12 படலங்களாகப் பகுத்துக் காட்டுகிறது. இந்த 12-இல் ஒன்று பாணாண் படலம். பாடாண் படலத்தில் 48 துறைகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் தொல்காப்பியம் கொடிநிலை, கந்தழி, வள்ளி எனக் காட்டிய துறைகளுக்கும் துறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றும் அந்த 48 துறைகளில் அடங்கும்.
- துறை விளக்கம்
- அரசன் கொடியைப் புகழ்வது. "கொடிநிலையாவது, கொடியது தன்மை கூறுவது" என்று பெருந்தேவனார் இதற்கு விளக்கம் தருகிறார்.[9]
- கொளு
- மூவர் கொடியுள்ளும் ஒன்றொடு பொரீஇ
- மேவரு மன்னன் கொடி புகழந்தன்று</ref>
- துறைவிளக்கப் பாடலின் செய்தி
- திருமாலின் கருடக்கொடி போல எம் மன்னன் கொடியைப் பல மன்னர்களும் பணிந்து போற்றட்டும்.[10]
இதையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- ↑ கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – தொல்காப்பியம் 3-85
- ↑ தொல்காப்பியம் – 3-78.
- ↑ கொடிநிலை, கந்தழி, வள்ளி, புலவராற்றுப்படை, புகழ்தல், பரவல்
- ↑ தொல்காப்பியம் – 3-79
- ↑ தேவாரம், திருவாசகம், திவ்வியப்பிரபந்தம் போன்றவை
- ↑ தொல்காப்பியம் 3-80,
- ↑ பிள்ளைத்தமிழ்
- ↑ உலாநூல்கள் போன்றவை
- ↑ பொன்பற்றிப் காவலர் புத்தமித்திரனார் இயற்றிய வீரசோழியம், பெருந்தேவனார் இயற்றிய உரையுடன், கா ர கோவிந்தராசனார் பதிப்பு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியீடு 1970 பக்கம் 117
- ↑
- பாடல்
- பூங்கண் நெடுமுடிப் பூவைப்பூ மேனியான்
- பாம்புண் பறவைக் கொடிபோல - ஓங்குக
- பல்யானை மன்னர் பணியப் பனிமலர்த்தார்க்
- கொல்யானை மன்னன் கொடி.