கே. ஜெனிதா ஆண்டோ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கே. ஜெனிதா அண்டோ (K. Jennitha Anto, பிறப்பு: 10, ஏப்ரல், 1987) என்பவர் இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சதுரங்க சர்வதேச மாஸ்டர் ஆவார்.[1] மூன்று வயதில் போலியோவால் பாதிக்கபட்ட இவர், சக்கர நாற்காலியைப் பயன்படுத்துகிறார். இவர் தனது 9 ஆம் வயதில் சதுரங்கம் ஆடத் துவங்கினார். 2013 முதல் 2017 வரை தொடர்ச்சியாக ஐபிசிஏ நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை சாம்பியன் ஆவனவர் ஆவார்.[2] .[3] இவர் பெண் சர்வதேச மாஸ்டர் (WIM) பட்டியலில் இடம்பிடித்தவர். மேலும் கிராண்ட் மாஸ்டர் ஆவதை நோக்கமாகக் கொண்டவர்.[4]

2018 ஆசிய பாரா விளையாட்டுகளில், இவர் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் ஆகிய நான்கு பதக்கங்களை வென்றார்.[5] 19 வது ஐபிசிஏ உலக தனிநபர் செஸ் சாம்பியன்ஷிப் 2019 இவர் 5.0 / 9 புள்ளிகளைப் பெற்று இந்த நிகழ்வில் அதிக மதிப்பெண் பெற்ற பெண் வீரர் என்ற பெயரைப் பெற்றார். இதனையடுத்து ஆறாவது முறையாக சாதனை படைத்தவர் ஆனார்.[5]

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
ஆசிய பாரா விளையாட்டுகள்
சதுரங்கம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 Jakarta Women's Individual Rapid P1
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 Jakarta Women's Individual Standard P1
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 Jakarta Women's Team Rapid P1
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 Jakarta Women's Team Standard P1

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கே._ஜெனிதா_ஆண்டோ&oldid=25635" இருந்து மீள்விக்கப்பட்டது