கே. கமலக்கண்ணன்
கே. கமலக்கண்ணன் (K. Kamalakannan)(பிறப்பு: ஆகஸ்ட் 11, 1912 - 24 மார்ச் 1981) என்பவர் இந்தியத் தொழிலதிபர், பொறியியல் ஒப்பந்தக்காரர், விவசாயி மற்றும் நில உரிமையாளர் ஆவார். இவர் நவம்பர் 1958 முதல் ஏப்ரல் 1959 வரை சென்னை மாநகரத் தந்தையாக பணியாற்றியுள்ளார்.[1] இவர் இந்தியத் தேசிய காங்கிரசில் உறுப்பினர் ஆவார்.[1]
குடும்பம்
துளுவ வெள்ளாள முதலியார் குடும்பத்தில் பிறந்த இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள அருங்கல் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.[2] சென்னை பச்சையப்பா கல்லூரிப் பள்ளியில் பயின்றார்.
இவர் கே. நேத்ராம்பிகையை மணந்தார். மேலும் இவர்களது இரண்டு குழந்தைகள், கே. விவேகானந்தன் மற்றும் டி. சாந்தி ஆவார். இவருக்குப் பல பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் தமிழ் முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பொதுப்பணி[2]
பல்வேறு குடிமை மற்றும் சமூக காரணங்களுக்காக நிதி திரட்டி நன்கொடை அளித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மதிய உணவுத் திட்ட நிதிக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் வசூலிக்கப் பொறுப்பேற்றார். தொடக்கப் பள்ளிகளுக்கு இரண்டு கட்டிடங்களை நன்கொடையாக வழங்கினார். இவற்றில் ஒன்று சென்னை தியாகராயநகரிலும் மற்றொன்று இவரது சொந்த இடத்தில் அருங்கல் கிராமத்தில் அமைந்துள்ளது.
வகித்தப் பதவிகள்[2]
சென்னை மாநகரத் தந்தை; சட்டமன்ற மேலவை உறுப்பினர்; உறுப்பினர், சென்னை மாவட்ட காங்கிரசு குழு; பொருளாளர், சென்னை மாவட்ட காங்கிரசு குழு; தலைவர், மண்டல காங்கிரசு குழு, இராயப்பேட்டை; உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரசு குழு; உறுப்பினர், நகர சபை 1952; தலைவர், நிலைக்குழு (பணிகள்) இரண்டு முறை; பச்சையப்பா அறங்காவலர் குழு உறுப்பினர்; துணைத் தலைவர், பாரத் சேவக் சமாஜ்; அறக்கட்டளை வாரியம், யோகா சமாஜ், அடையார்; தலைவர், நரிக்குறவர் சங்கம், தமிழ்நாடு
இயக்குநர், மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம், நிறுவனம்; நிர்வாக அறங்காவலர், சுந்தரேசுவரர் தேவஸ்தானம் ராயப்பேட்டை; அறங்காவலர், ஸ்ரீ வடபழனி ஆண்டவர் கோவில், கோடம்பாக்கம், சென்னை; இயக்குநர், இந்து ஒன்றிய குழு மேல்நிலைப்பள்ளி, சூளை, சென்னை;
விவசாயிகள் மன்றத்தின் துணைத் தலைவராக இருந்த இவர், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு பண்ணைகளுக்கான தூதுக்குழுவை வழிநடத்தினார்.
மேற்கோள்கள்