கே. எஸ். சிவகுமாரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கே. எஸ். சிவகுமாரன்
Ks sivakumaran.jpg
முழுப்பெயர் கே. எஸ். சிவகுமாரன்
பிறப்பு 01-10-1936
பிறந்த இடம் புளியந்தீவு,
மட்டக்களப்பு
மறைவு 15-09-2022
கொழும்பு
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
கல்வி பேராதனைப் பல்கலைக்கழகம்
(இளங்கலை)
சென்னைப் பல்கலைக்கழகம்
(முதுகலை)
பணி ஆசிரியர்

கே. எஸ். சிவகுமாரன் (1 அக்டோபர் 1936 – 15 செப்டம்பர் 2022) ஈழத்து எழுத்தாளரும், கலை, இலக்கியத் திறனாய்வாளரும், வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மட்டக்களப்பில் புளியந்தீவில் சிங்களவாடி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர்கள் திருகோணமலையையும், மட்டக்களப்பையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இலங்கையிலும், பின்னர் ஓமானில் 1998 முதல் 2002ஆம் ஆண்டு வரை ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். மாலைத்தீவுகளிலும் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

இலக்கியம், நாடகம், திரைப்படம், ஊடகங்கள், அறிவியல், செய்தித் திறனாய்வுகள், அரசியல் திறனாய்வுகள், இசை, நடனம், ஓவியம், மொழிபெயர்ப்பு, சிறுகதை, கவிதை போன்ற பல துறைகளிலும் எழுதி ஒலி, ஒளிபரப்பி வந்திருக்கிறார். இலங்கை வானொலியில் தமிழிலும், ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். 30 தமிழ் நூல்களையும், 2 ஆங்கில நூல்களையும், இரண்டு ஆங்கில மொழிக் கலைக்களஞ்சியங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலம், மற்றும் சிங்கள மொழிகளிலும் எழுதுகிறார். ரேவதி என்ற புனைபெயரிலும் திரைப்படம் சம்பந்தமான கட்டுரைகளை ஆங்கிலத்தில் இவர் எழுதி வந்திருக்கிறார். 1959 இல் நாவலாசிரியர் வரிசையில் வரதராசனாரின் இடம் என்பதே இவர் எழுதிய முதலாவது இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையாகும். ஜீவநதி சஞ்சிகை கே. எஸ். சிவகுமாரனுடைய பவள விழாச் சிறப்பிதழாக ஓர் இதழை வெளியிட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தில் பாராட்டு

கே. எஸ். சிவகுமாரனின் சேவையைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் கௌரவிக்கிறார்.

இலங்கை வானொலி தமிழ் தேசிய, வர்த்தக ஒலிபரப்புகளிலும், ஆங்கில சேவையிலும் 1960களில் பணியாற்றிய மூத்த ஒலிபரப்பாளரான கே. எஸ். சிவகுமாரனுக்கு சென்னையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னை பல்கலைக் கழக இதழியல், தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இலங்கை வானொலி தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. பிரபல தொழிலதிபரும் சென்னை பொதிகை தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான வி. கே. டி. பாலன், மற்றும் இலங்கை வானொலி மேனாள் மூத்த ஒலிபரப்பாளர் அப்துல் ஜப்பார், ஈழத்து எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான தம்பிஐயா தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் துறைத்தலைவர் கே. எஸ். சிவகுமாரனுக்கு சால்வை அணிவித்து நினைவுக் கேடயம் ஒன்றையும் வழங்கினார்.

வாழ்நாள் சாதனையாளர்

யாழ்ப்பாணத்தில் 2020 டிசம்பர்-2021 ஜனவரி காலப்பகுதியில் நடைபெற்ற ஆறாவது யாழ்ப்பாணம் சர்வதேச திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

இவரது நூல்கள்

  • Aspects of Culture in Shri Lanka
  • Tamil Writing in Sri Lanka
  • அசையும் படிமங்கள்
  • அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் - 04
  • இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு கண்ணோட்டம்
  • இருமை
  • ஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை
  • ஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06
  • ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை (1962-1979)
  • ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை (1980-1998)
  • ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03
  • ஒரு திறனாய்வாளரின் இலக்கியப் பார்வை...
  • காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
  • கே.எஸ்.சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு/மதிப்பீடுகள் சில
  • கைலாசபதியும் நானும்
  • சினமா! சினமா! ஓர் உலக வலம்
  • சிவகுமாரன் கதைகள்
  • சொன்னாற்போல - 1
  • சொன்னாற்போல - 2
  • சொன்னாற்போல - 3
  • திறனாய்வு என்றால் என்ன?
  • திறனாய்வுப் பார்வைகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் - 01
  • பண்டைய கிரேக்க முதன்மையாளர்கள்
  • பிறமொழிச் சிறுகதைகள் சில
  • மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 07
  • மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் - பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுக்களும் 05
  • கலை இலக்கியப் பார்வைகள் (2014)
  • திரைப்படத் துறையில் (கட்டுரைத் தொகுப்பு, 2020)

இறப்பு

கே. எஸ். சிவகுமாரன் 2022 செப்டம்பர் 15 ஆம் நாள் தனது 85-ஆவது அகவையில் கொழும்பில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=கே._எஸ்._சிவகுமாரன்&oldid=2571" இருந்து மீள்விக்கப்பட்டது