கூவம் திரிபுராந்தகர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கூவரம், திருவிற்கோலம்
பெயர்:திருவிற்கோலம் திரிபுராந்தகர் கோயில்
அமைவிடம்
ஊர்:கூவம்
மாவட்டம்:திருவள்ளூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:திரிபுராந்தகர்,திருவிற்கோலநாதர், திரிபுராந்தகேசுவரர்
உற்சவர்:சோமாஸ்கந்தர்
தாயார்:திரிபுராந்தக நாயகி, திரிபுரசுந்தரி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்னி தீர்த்தம்(கூவாக்கினி-குளம்; தவளைகள் இக்குளத்தில் குடியிருப்பதில்லை என்பது ஐதீகம்)
ஆகமம்:சிவாகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞான சம்பந்தர்

கூவம் திரிபுராந்தகர் கோயில் (Tripuranthaka Swamy Temple) என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.[1]

இறைவன், இறைவி

இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி.

சிறப்புகள்

இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். இந்த லிங்கம் மணலால் ஆனது என்கின்றனர். இவருக்கு பூசை செய்யும்போது கோயில் அச்சகர்கூட இவரைத் தொடுவது. இல்லை. மூலவரை தொடாமலே அனைத்து பூசைகளும் செய்யப்படுகின்றன. மனித கரம் படாத திருமேனி என்பதால் இவரது திருமேனியை தீண்டாத் திருமேனி என அழைக்கின்றனர். கோயிலுக்கு வடக்கே தொலைவில் உள்ள திருமஞ்சன மேடையில் இருந்து கூவம் ஆற்று நீரைக் கொண்டுவந்தே இறைவனுக்கு அபிசேகம் செய்யப்படுகிறது. தவறி வேறு நீரால் அபிசேகம் செய்தால் இறைவன் மீது எறும்பு மொய்த்துவிடுகிறது என்கின்றனர்.[2]

பெயர் விளக்கம்

திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் இத்தலத்திற்கு வந்தது.[3] திருவாலங்காடு நடராசருடன் நடனமாட சிலம்பு முத்துக்கள் விழுந்த இடம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

அமைவிடம்

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூவம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் வழியாக திருவள்ளூர் பாதையில் கூவம் பிரிவு சாலையில் அமைந்துள்ளது.

படத்தொகுப்பு

இவற்றையும் பார்க்க

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 35

வெளி இணைப்புகள்

அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்