கூமாங்குளம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கூமாங்குளம்
கூமாங்குளம் is located in இலங்கை
கூமாங்குளம்
கூமாங்குளம்
ஆள்கூறுகள்: 8°45′5.04″N 80°27′53.1″E / 8.7514000°N 80.464750°E / 8.7514000; 80.464750
கூமாங்குளம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - வவுனியா
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
மக்கள் தொகை
(2016)
8790 (1562 குடும்பங்கள்)

கூமாங்குளம் (Koomankulam) இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் வவுனியா பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ள கிராம அலுவலர் பிரிவும் ஊரும் ஆகும்.[1]

மக்கள்

2015 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண்கள் 3, 370 பேரும் பெண்கள் 3, 382 பேரும் சிறுவர்கள் 2, 038 பேரும் ஆக மொத்தம் 8, 790 பேராக 1, 562 குடும்பங்கள் இக்கிராமத்தில் உள்ளனர். இக்கிராமத்தில் 46 மாற்றுத் திறனாளிகளும் உள்ளனர். இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் வெள்ளாமையில் ஈடுபடுகின்றனர் இது தவிர சிறு அளவில் அன்னாசி பயிரிடுவர்கள், கோழி வளர்ப்பில் ஈடுபடுவர்கள் உள்ளனர். சமுர்த்தி திட்டமூடான கடனூடாக சிறுதொழில் முயற்சியில் ஈடுபடுவர்களும் உள்ளனர்.[சான்று தேவை]

பொதுவசதிகள்

இக்கிராமத்தில் பொதுமண்டபத்தில் கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் பணியாற்றுகின்றனர். இதற்கு அருகில் முதியோர் சங்கமும் உள்ளது. இக்கிராமத்திலேயே சாய் சிறுவர் இல்லம் உள்ளது. 2014 ஆம் ஆண்டில் இருந்து இக்கிராமத்திற்கு சித்திரா நீர்த்திட்டம் ஊடாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கிராமத்தவர்களுக்கு இலவசமாக விநியோகித்து வருகின்றனர். இதை அன்றையை அரச அதிபர் பந்துல ஹரிச்சந்திர ஆரம்பித்து வைத்தார்.[2] இக்கிராமத்தில் வவுனியா தெற்கு தமிழ்பிரதேச சபையின் நூலகமும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கமும் அமைந்துள்ளது. இதைவிட மரணசங்கமும் உள்ளது. இக்கிராமத்தில் சித்திவிநாயகர் பாடசாலையும் அதனுடன் அமைந்துள்ள விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது. ஸ்ரீ சித்திவிநாயகர் முன்பள்ளி, அம்பாள் முன்பள்ளியும், ஜெயா முன்பள்ளி என மூன்று முன்பள்ளி இக்கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வயல்வெளிகளும் உள்ளது. இக்கிராமத்தில் சிறு கைத்தொழில் முயற்சிகளாக நொறுக்குத்தீனி, பற்பொடி, நல்லெண்ணெய் தயாரிக்கபடுகிறது. இக்கிராமத்தில் அநேகமாகமானவர்களிடம் மலசலகூட வசதிகள் உள்ளது.

அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள்

இக்கிராமத்தில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிளிற் பயணிக்கின்ற பொழுதும் சிற்றொழுங்கைகளில் தலைக்கவசம் இன்றி பிரயாணிப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தில் கணிசமான அளவு தாய்மார்கள் மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்களாகச் செல்வதால் இவ்வாறான குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக் கல்வியில் பின்னடைவுகளைக் கண்டுவருகின்றனர்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கூமாங்குளம்&oldid=40101" இருந்து மீள்விக்கப்பட்டது