குளம்பா தாயனார்
குளம்பா தாயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குளம்பா என்னும் ஊரில் வாழ்ந்தவர். சங்க நூல் தொகுப்பில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று மட்டும் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 253 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது.[1]
புறநானூறு 253 சொல்லும் செய்தி
- முதுபாலை என்னும் துறையைச் சார்ந்தது.
முதுபாலை என்பது கணவனுடன் வெளியூர் செல்லும்போது வழியில் பாலைநிலத்தில் மனைவி கணவனை இழந்து புலம்பும் நிலையைக் கூறுவது என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[2]
எனக்காக யாரும் அவலம் கொள்ளவேண்டா. போரில் வெற்றி கண்ட இளைஞர்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கும் நிலை நேர்ந்துள்ளது. மூங்கில் வெட்டுவோர் அதன் நெல்-கதிர்களை வெட்டி எறிந்து சிதறிக் கிடப்பது போல என் கையில் உள்ள வளையல்களைச் சிதறிக்கிடக்கும்படி உடைத்துப் போட்டுவிட்டு வெறுங்கையை வீசிக்கொண்டு என் சுற்றத்தாருடன் நான் வாழ்வேன் என நினைக்கிறாயா? சொல்லுங்கள். - இவ்வாறு ஒரு பெண் புலம்புவதாக இவரது பாடல் கூறுகிறது.