குற்றியலுகரப் புணர்ச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குற்றியலுகரச்சொற்கள் பிற சொற்களுடன் இணைவதைக் குற்றியலுகரப் புணர்ச்சி என்பர்.

குற்றியலுகரம் என்பது உகரம் ஏறிய வல்லின எழுத்துகளான கு,சு,டு,து,பு,று சொல்லின் ஈற்றில் அமைந்து வரும் போது தன் ஓசையில் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் எனப்படும். குற்றியலுகரம் ஆறு வகைப்படும், குற்றியலுகர எழுத்துகளின் எண்ணிக்கை - 6 (கு,சு,டு,து,பு,று)

குற்றியலுகர வகைகளாவன.

நெடில்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - நாகு, காசு, காடு, ஏது, காபு, ஆறு

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - வரகு, முரசு, முருடு, மருது, துரபு, கவறு

ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - எஃகு, கஃசு, அஃது, கஃறு,

வன்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - நாக்கு, காச்சு, காட்டு, காத்து,காப்பு, காற்று

மென்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - அங்கு, மஞ்சு, வண்டு, வந்து, அன்பு, வென்று


இடைத்தொடர்க் குற்றியலுகரம்

எ.கா. - சால்பு, சார்பு,காழ்பு,கொய்து,தெள்கு

நன்னூல் விதி (164)

"உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்"

விளக்கம்

நிலை மொழி ஈறு உகரம் வந்து வருமொழியில் உயிரெழுத்து வருமானால் நிலைமொழியில் ஈற்றில் உள்ள உகரம் மெய் எழுத்தை விட்டு விலகிவிடும்.

எ.கா :- காசு+ஓலை → காச் + ஓலை

நன்னூல் விதி (204)

"உடன்மே லுயிர்வந் தொன்றுவ தியல்பே"

விளக்கம்

நிலை மொழி ஈறு உகரம் வந்து வருமொழியில் உயிரெழுத்து வருமானால் நிலைமொழியில் ஈற்றில் உள்ள உகரம் மெய் எழுத்தை விட்டு விலகியபின் அம்மெய்யில் வருமொழியின் உயிர் எழுத்து இணைவது.

எ.கா :- காசு+ஓலை → காச் + ஓலை

எ.கா :- காசு+ஓலை → கா+ச்+ ஓலை = காசோலை

நன்னூல் விதி (183)

"நெடிலோ டுயிர்த்தொடர்க் குற்றுக ரங்களுட்

டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே"

விளக்கம்

டு,று ஆகியவற்றில் ஒன்றை ஈற்றாகக் கொண்டுவரும் நெடில் தொடர், உயிர்த் தொடர் குற்றியலுகர சொற்கள் வருமொழியுடன் இணையும் போது ட்,ற் ஆகிய எழுத்துகள் தோன்றும்

எ.கா :- ஆறு+பாலம் = ஆற்றுப்பாலம்

எ.கா :- காடு + வழி = காட்டுவழி

கருவி நூல்[தொகு]

நன்னூல் மூலமும் விருத்தியுரையும் (அ.தாமோதரன் அவர்களின் பதிப்பு), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

kaushik

king_kaushik_2703