குறியறி சிந்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குறியறி சிந்து (குறி அறி சிந்து) என்பது சிற்றிலக்கிய வகைகளில் சேர்த்துப் பாகுபடுத்திக் காட்டப்பட்டுள்ள நூல் வகை. [1]

பாவை ஒருத்தி பவனி வரும் மின்னலால் எதிர்ப்பட்டு ஆசை மயக்கம் கொண்டு தன் ஆரத்தைக் கழற்றி எடுத்துக்கொண்டு அவளுக்கு அணிவிக்கச் செல்லும் மன்மத வேள் போன்ற ஒருவன் அவளது உடலுறுப்பு நலன்களைக் கூறிக்கொண்டு செல்லுதலும், அவளுக்கு இருக்கும் பாதுகாப்பை எண்ணுதலும், அவளைக் கூடும் குறிப்பு, தனக்கு உள்ளதைச் சொல்லுதலும், நாடும் பிற கருத்துகளைக் கூறுதலும் குறியறி சிந்து இலக்கிய வகையாகும். ஒருத்தியின் குறிப்பை அறிய முற்படுதல் பற்றிக் கூறுவதால் இந்த இலக்கியம் இப் பெயரினைப் பெற்றது. குறம் என்னும் குறி சொல்லும் இலக்கியம் வேறு.

பவனி மின்னால் கூட்டம் மயல் பாவை வரல் கண்டு
திவள் ஆரம் நீக்கி எதிர் செல் வேள் – அவன் உறுப்புக்
கூறல் அரண் கூடல் குறி அகவல் நாடு பிற
சோறல் குறியறி சிந்து. [2]

மேற்கோள்

  1. பிரபந்தத் திரட்டு, தமிழ் இலக்கண நூல்கள், ச. வே. சுப்பிரமணியன் தொகுப்பு, மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு, 2007, பக்கம் 487
  2. நூற்பா 18
"https://tamilar.wiki/index.php?title=குறியறி_சிந்து&oldid=16805" இருந்து மீள்விக்கப்பட்டது