கு. ராஜவேலு
கு. ராஜவேலு (Ku. Rajavelu) புகைப்படம் நன்றி tamilonline.com(இறப்பு: செப்டம்பர் 9, 2021) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக இரு ஆண்டுகள் சிறையிலிருந்தவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் போன்ற தேசியத் தலைவர்களைச் சந்தித்து உரையாடியவர். ”ஆகஸ்ட் - 1942”, “காதல் தூங்குகிறது” போன்ற புதினங்களை எழுதியவர். இவர் எழுதிய "சித்திரச் சிலம்பு" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
இலக்கியவாழ்க்கை
தன் 14-வது வயதில் சிறுகதைகள் எழுதத் தொடங்கியவர் கு.ராஜவேலு. கல்லூரி மாணவராக இருக்கையில் இவருடைய முதல்நாவல் 'காதல் தூங்குகிறது’ கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல்போட்டியில் முதல்பரிசு பெற்றது. தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், மு.வரதராசனார் இருவரும் இவருடைய இலக்கியத் தோழர்கள். மு.வரதராசனாரின் பாணியில் நாவல்களை எழுதினார்.
இலக்கிய இடம்
கு.ராஜவேலு மாணவர்கள் பயில்வதற்குரிய நல்லொழுக்க அறிவுறுத்தல்கொண்ட நாவல்களை எழுதியவர். அவை கல்லூரிகளில் பாடமாக இருந்தன. அவற்றில் அழகு ஆடுகிறது குறிப்பிடத்தக்கது.
விருதுகள், சிறப்புகள்
கு.ராஜவேலுவுக்கு இந்திய அரசு தபால்தலை வெளியிட்டுள்ளது.
மறைவு
கு.ராஜவேலு செப்டெம்பர் 9, 2021 அன்று சென்னையில் மறைந்தார்.
நூல்கள்
- கொடைவளம்
- சத்தியச்சுடர்கள்
- வைகறை வான்மீன்கள்
- வள்ளல் பாரி
- வானவீதி
- காந்தமுள்
- மகிழம்பூ
- தேயாத நிறைநிலா
- இடிந்தகோபுரம்
- அழகு ஆடுகிறது
- அடிவானம்
- தங்கச்சுரங்கம்
- சாலையோரம்
உசாத்துணை
- காலமானார் மூத்த எழுத்தாளர் கு.ராஜவேலு- Dinamani
- தமிழ் தியாகிகள் கு.ராஜவேலு
- வள்ளல் பாரி கு ராஜவேலு
- கண்ணீர் விட்டா வளர்த்தோம்? கு.ராஜவேலு பற்றிய பதிவு
அடிக்குறிப்புகள்