கீழை ஜமீல்
கீழை ஜமீல் வரின் முழுப் பெயர் ஜமீல் முஹம்மது ஆகும். இந்தியாவில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் கீழக்கரை எனும் ஊரில் 18.02.1965இல் பிறந்தார். இவரது பெற்றோர்கள். ப.அ.சா.முஹைதீன் அப்துல் காதர் மற்றும் மு.நு.சு.லத்தீஃபா பீவி ஆவர்.
இவர் பள்ளிப்படிப்பை கைராத்துல் ஜலாலியா தொடக்கப்பள்ளியிலும், மேனிலைப் படிப்பை ஹமீதியா ஆண்கள் மேனிலைப் பள்ளியிலும் படித்தார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி படிப்பிற்கு பிறகு, இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மார்க்க அறிவுகளை கற்று பேச்சாளராக ஜமீல் முஹம்மது வளர்ந்தார். வியாபார நிமித்தமாக வளைகுடா நாட்டிற்கு பயணமான அவர் 2002இல் தமுமுகவின் துபை மண்டலக் கிளை தலைவராக பொறுப்பு ஏற்று நடத்தி வந்தார்.2003 ஜனவரியில் கீழக்கரை அஞ்சல் என்ற சமுதாய மாத இதழை உருவாக்கி அதன் ஆசிரியராக இருந்து வருகிறார்.
2004ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் துபை மண்டலக் கிளையான ஜமாஅத்துத் தவ்ஹீத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைந்து அதன் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பு வகிக்கிறார்.