கில்லி (திரைப்படம்)
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |
கில்லி | |
---|---|
இயக்கம் | தரணி |
தயாரிப்பு | ஏ. எம். ரத்னம் ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ் |
கதை | தரணி |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் த்ரிஷா பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | எஸ். கோபிநாத் |
வெளியீடு | 2004 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மொத்த வருவாய் | ₹100 கோடி[1] (வெளியீடு மற்றும் மறு வெளியீடு மொத்த வசூல்) |
கில்லி (Ghilli) (தமிழாக்கம்: எதற்கும் துணிந்தவர்) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மறு வெளியீட்டில் ஹாலிவுட் படமான டைட்டானிக் வசூலை முறியடித்து இந்திய அளவில் சாதனை படைத்தது.
வகை
கதை
சரவணவேலு (எ) வேலு, மாநிலளவு கபடி விளையாட்டு வீரர். இவரவது தந்தை, சிவசுப்பிரமணியம், சென்னை காவல் துணை ஆணையராக பணிபுரிபவர். மகன் கபடிமேல் கொண்ட ஆர்வம் மற்றும் கல்வியில் நாட்டம் இல்லாதிருப்பாதாலும், தந்தை-மகன் உறவு மெலிந்தேயிருந்தது. வேலுவின் தாயார் மகனின் மேல் அன்பு மிகுந்திருந்தார். தங்கை புவனா தமயனின் செயல்பாடுகளை தந்தை காதில் ஓதி சிக்கல்களை உண்டாக்குவார், இருப்பினும், அண்ணனை விட்டுக்கொடுக்கமாட்டார்.
இவ்வாறிருக்க மறுபுறம், மதுரையில், ஈவு மற்றும் நேயமற்ற முத்துபாண்டி என்றழைக்கப்படும் கதையின் எதிர்குண நடிகர், அவ்வூரிலே வாழ்ந்து வரும் தனலட்சுமி எனும் பெண்ணின் பால் ஈர்க்கப்படுகிறார், மேலும் தன்னை மணமுடிக்கவும் கட்டாயப்படுத்துகிறார். தங்கை மீது கொண்ட அன்பால் தட்டிக்கேட்கும் இரு அண்ணகளையும் கொல்கிறார் முத்துபாண்டி. தனலட்சுமியின் தந்தை அஞ்சி, ஊர் அறியாமல் மகளை அமெரிக்காவில் வாழ்ந்து வரும் மைத்துனரது வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்து, பணத்தையும் சான்றிதழ்களையும் கொடுத்து அனுப்பிவைக்கிறார்.
தப்பிவோடும் வழியில் முத்துப்பாண்டியிடம் மாட்டிக்கொள்கிறார் தனலட்சுமி. இதனிடையே, மதுரைக்குக் கபடி ஆட வரும் வேலு, தனலட்சுமியின் துயரைக்கண்டு அவளைச் சென்னையில் தனது இல்லத்தில் அடைக்கலம் அளிக்கிறார்.
வேலு தன் நண்பர்கள் உதவிகளுடன், கடவுச்சீட்டு, வெளிநாட்டு நுழைவுச்சான்றிதழ் மற்றும் பயணச்சீட்டு போன்றவற்றை அமெரிக்கா செல்ல ஏற்பாடுச் செய்கிறார்.
உள்துறை அமைச்சர் இராஜபாண்டி, முத்துப்பாண்டியின் தந்தையாவார். அவர், வேலுவின் தந்தையென அறியாது துணை ஆணையர் சிவசுப்பிரமணியனிடமே, வேலுவை கொணர ஆணையிடுகிறார்.
தன்னில்லத்திலேயே தங்கியிருந்த தனலட்சுமிக்கு, அடைக்கலம் அளித்தது தன் மகன் என்றறிய வரும் சிவசுப்பிரமணியம், அவர்களைப் பிடிக்க முற்பட, இருவரும் தப்பி, கலங்கரை விளக்கின் மேலிடையில் புகுகின்றனர்.
வேலுவின் மேல் ஈர்ப்படையும் தனலட்சுமி அமெரிக்கா செல்ல மனமில்லாமல் போகிறார். தனலட்சுமி அமெரிக்க பயணிக்கயிருக்கும் அதே நாளில் தான் வேலு கபடியாட்டத்தின் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் நாளுமாகும்.
தனலட்சுமியை வானூர்தி நிலையத்தில் விட்டு, போட்டியில் பங்கேற்கும் வேலு தன் காதலை உணர்கிறார். சற்றுநேரத்திற்கு பின் அயலகம் செல்லாது கபடியாட்ட களத்திற்கு வருகிறார் தனலட்சுமி. இருவரும் காதலை உணர்ந்து இணைகிறார்கள்.
நடிகர்கள்
விஜய் - சரவணவேலு (எ) வேலு
த்ரிஷா - தனலட்சுமி
பிரகாஷ் ராஜ் - முத்துப்பாண்டி
ஆஷிஷ் வித்யார்த்தி - சிவசுப்ரமணியம், வேலுவின் தந்தை
தனிகெள்ள பரணி - இராஜபாண்டி, முத்துப்பாண்டியின் தந்தை
ஜானகி சபேஷ் - சரவணவேலுவின் தாய்
குழந்தை ஜெனிபிர் - புவனா, சரவணவேலுவின் தங்கை
தாமு - ஓட்டேரி நரி, சரவணவேலுவின் நண்பர்
பிரம்மானந்தம் - ஐயர்
மயில்சாமி (நடிகர்) - நாராயணன்
தயாரிப்பு
விஜய், ஒக்கடு எனும் தெலுங்குத் திரைப்படத்தின் முதன்மை நடிகராக நடிக்க விருப்பமுற்றத்தைத் தெரிவித்து, தயாரிப்பாளர் இரத்தனத்தை மறுவாக்க உரிமையை வாங்க முற்படுத்தினர். இயக்குநர் தரணியை படக்குழுவில் சேர்த்தனர். இதன்முன், இரத்தனம் மற்றும் தரணியின் இயக்கத்தில் வெளிவந்த தூள் எனும் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்தது. தரணியின் வழக்கமான படக்குழுவினர்களான ஒளிப்பதிவாளர் கோபிநாதும் மற்றும் இசையமைப்பாளர் வித்யாசாகரும் இணைந்தனர். ராக்கி ராஜேஷ் மற்றும் ராஜு சுந்தரம், சண்டைக்காட்சி மற்றும் ஆடல் பயிற்சியாளர்களாக தேர்தெடுக்கப்பட்டனர். பின், திரிஷா கிருஷ்ணன் பெண் முதன்மை வேடத்திற்கு ஒப்புக்கொண்டார். மறுபுறம், பிரகாஷ் ராஜ், ஒக்கடு படத்தில் புரிந்த எதிர்குண வேடத்தை மீண்டும் இந்தப் படத்திலும் புரிய ஒப்புக்கொண்டார். தாமு மற்றும் பிரபு தேவாவின் உடன்பிறந்தவரான நாகேந்திர பிரசாதும் துணைநடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆஷிஷ் வித்யார்த்தி, ஜானகி சபேஷ், குழந்தை ஜெனிபர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னணி பாடகர், கலைமாமணி டி. கே. கலா, முத்துப்பாண்டியின் தாயாராக நடிக்க ஒப்புக்கொண்டார். களவாணி மற்றும் பசங்க போன்ற திரைப்படங்களின் முன்னணி நடிகரான விமல் இப்பபடத்தில் கபடிக்குழுவில் விளையாட்டு வீரராகவும், 'அதிகார ஒப்பு' அளிக்கப்படாத துணை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
விஜய் முன் நடித்துவந்த திருமலை எனும் அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தபின், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2003யின் நடுவில் தொடங்கியது. சென்னையில், மயிலாப்பூர் மற்றும் பெசன்ட் நகர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் அறிமுக சண்டைக்காட்சிகள் மற்றுமொரு பாடல் படப்பிடிப்புகள் விலையுயர்ந்ததாகும். கலங்கரை விளக்கம் மாதிரியும் நிறுவப்பட்டது. அதிரடி மற்றும் துரத்தும் காட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் அருகாமையில் பதிவு செய்யப்பட்டது. படத்தின் உச்சகட்ட காட்சிகள் ஆயிரம் மக்கள் சூழ்ந்த இடத்தில், பிள்ளையார் முழுநிலவு (சதுர்த்தி) நாளன்று எடுக்கப்பட்டது.
துணுக்குகள்
- தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.
இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.
வெளியிணைப்புகள்
- ↑ TV, Thanthi (2024-04-28). "Ghilli re-release collects 50 crore worldwide and before that with total collection 100 crore in 30 days run" (in ta) இம் மூலத்தில் இருந்து 2024-05-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240523150229/https://www.thanthitv.com/News/Cinema/gillirerelase-dhamu-vijay-261913.