கிசோனா செல்வதுரை
கிசோனா செல்வதுரை | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | மலேசியா |
பிறப்பு | அக்டோபர் 1, 1998 சிரம்பான், நெகிரி செம்பிலான், மலேசியா |
உயரம் | 1.62 m (5 அடி 4 அங்) (5 அடி 4 அங்) |
எடை | 50 kg (110 lb; 7.9 st) |
கரம் | வலது |
பெண்கள் ஒற்றையர் | |
பெரும தரவரிசையிடம் | 53 (22 ஜுன் 2021) |
தற்போதைய தரவரிசை | 64 (1 பிப்ரவரி 2022) |
இ. உ. கூ. சுயவிவரம் |
வென்ற பதக்கங்கள் | ||
---|---|---|
நாடு மலேசியா | ||
பெண்கள் இறகுப்பந்தாட்டம் | ||
சுடிர்மான் கோப்பை | ||
2021 வந்தா, பின்லாந்து | கலப்பு அணி | |
ஆசிய அணி போட்டி | ||
2020 மணிலா | பெண்கள் அணி | |
2022 சிலாங்கூர் | பெண்கள் அணி | |
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் | ||
2019 பிலிப்பைன்ஸ் | பெண்கள் ஒற்றையர் | |
2019 பிலிப்பைன்ஸ் | பெண்கள் அணி | |
சிட்னி அனைத்துலகத் தொடர்[1] | ||
2019 சிட்னி | பெண்கள் ஒற்றையர் | |
மலேசியா அனைத்துலகத் தொடர்[1] | ||
2017 கோலாலம்பூர் | பெண்கள் ஒற்றையர் | |
2018 கோலாலம்பூர் | பெண்கள் ஒற்றையர் | |
ஆசிய இளைஞர் விளையாட்டு | ||
2013 நான்ஜிங் | பெண்கள் ஒற்றையர் | |
ஆசிய இளையோர் போட்டி | ||
2012 கிம்சியோன், தென் கொரியா | கலப்பு அணி |
கிசோனா செல்வதுரை (பிறப்பு: 1 அக்டோபர் 1998); (மலாய்: Kisona Selvaduray; ஆங்கிலம்: Kisona Selvaduray) என்பவர் மலேசியாவில் இறகுப் பந்தாட்டக்காரர்.[2] 2013 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.[3]
கிசோனா செல்வதுரை மலேசியாவின் முதல் நிலை ஒற்றையர் ஆட்டக்காரராகத் திகழ்கின்றார். 2019-ஆம் ஆண்டில் பிலிப்பின்ஸில் நடைபெற்ற 30-ஆவது தென் கிழக்காசியப் போட்டிகளின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[4]
அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி அனைத்துலகப் போட்டிகளில் வாகை சூடிய அவர், கடந்த 2021-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஸ்பெய்ன் பொது இறகுப் பந்தாட்டப் போட்டிகளிலும் வெற்றி பெற்றார். [5]
இவர் தன் முதல் அனைத்துலகப் பட்டத்தை, இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறகுப் பந்தாட்டப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வென்றார்.[6]
தனிப்பட்ட வாழ்க்கை
கிசோனா செல்வதுரை, இறகுப் பந்தாட்டம் விளையாடும் குடும்பத்தில் இருந்து வந்தவர். இவரின் சகோதரர்கள் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த போட்டிகளில் செலுபு மாவட்டத்தைப் பிரதிநிதித்தவர்கள்.[7]
இவரின் தந்தையார் ஒரு காவல்துறை அதிகாரி. இவர் ஜெலுபு காவல்துறை அணியை பிரதிநிதித்தவர். கிசோனாவின் தாயார் எஸ். வளர்மதி. இவர் தன் பள்ளியைப் பிரதிநிதித்தவர். போலீஸ் குடும்பச் சங்க அணிக்காகவும் விளையாடியவர்.[7]
மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு மன்றம்
கிசோனா செல்வதுரை 4 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைக் குட்டியாவார். இவருக்கு இரு அண்ணன்கள்: தினகரன், மகேந்திரன். ஓர் அக்கா: கண்மணி. அனைவருமே இறகுப் பந்தாட்டத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.
கிசோனா தன் 10-ஆவது வயதில் பெர்லிஸ் கங்கார் நகரில், 2009-ஆம் ஆண்டு மலேசியப் பள்ளிகளின் விளையாட்டு மன்றம் நடத்திய இறகுப் பந்தாட்டப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இளம் வெற்றியாளராகச் சாதனைப் புரிந்தார்.[7]
விளையாட்டு வரலாறு
2012-ஆம் ஆண்டிலும் 2014-ஆம் ஆண்டிலும் மலேசியப் பள்ளிகளுக்கான ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற கிசோனா. தேசிய இளநிலை வெற்றியாளர் விருதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்குத் தக்க வைத்துக் கொண்டார்.
2013-ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் வெண்கலம் வென்றார். 2014-ஆம் ஆண்டு நடந்த உலக இளையோர் போட்டியில் கிசோனாவுக்கு காலில் பெரும் காயம் ஏற்பட்டது.[8] இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப் பட்டன. மூன்று ஆண்டுகளுக்கு இறகுப் பந்தாட்டம் விளையாடுவதை நிறுத்தி விட்டார்.[9]
இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறுதிப் போட்டி
அவர் மீண்டும் விளையாடத் தொடங்கிய போதும், தொடக்கச் சுற்றுகளில் தோல்வி அடைந்தார். இருப்பினும், 2017-இல் இந்தோனேசியா அனைத்துலகத் தொடர் இறுதிப் போட்டியில் தங்கம் வென்றார்.
பின்னர் அவர் 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை மலேசியா அனைத்துலகப் போட்டியில் வென்றார். 2019-ஆம் ஆண்டில் கிரீஸ், எல்லாஸ் பொதுப் போட்டி (Hellas Open); மற்றும் சிட்னி அனைத்துலகப் போட்டிகளில் வென்றது அவரின் மற்ற சாதனைகளாகும்.
சாதனைகள்
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள்
பெண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | போட்டியாளர் | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
2019 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் | முன்டின்லுபா விளையாட்டு வளாகம், மணிலா, பிலிப்பைன்ஸ் | ருசெலி அர்தாவான் | 20–22 21–14 21–13 |
தங்கம் |
ஆசிய இளைஞர் விளையாட்டு
பெண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | போட்டியாளர் | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
2013 நான்ஜிங் பெண்கள் ஒற்றையர் | நான்ஜிங் விளையாட்டு நிறுவனம், நான்ஜிங், சீனா | ஓ என் மேய் | 21–15 23–21 |
வெண்கலம் |
இறகுப்பந்தாட்ட உலகப்போட்டி
பெண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | போட்டியாளர் | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
2017 | இந்தோனேசியா அனைத்துலகப் போட்டி | கிரிகோரியா மாரிசுகா துன்சங் | 10–21 21–16 21–19 |
வெற்றியாளர் |
2017 | மலேசியா அனைத்துலகப் போட்டி | லீ இங் இங் | 16–21 21–15 21–17 |
வெற்றியாளர் |
2018 | மலேசியா அனைத்துலகப் போட்டி | லியாங் திங் யூ | 14–21 21–7 21–19 |
வெற்றியாளர் |
2019 | கிரீஸ் எல்லாஸ் பொதுப் போட்டி | தெட் ஊட்டர் துசார் | 21–14 21–9 |
வெற்றியாளர் |
2019 | சிட்னி அனைத்துலகப் போட்டி | சியோர் எபிகரா | 21–18 21–13 |
வெற்றியாளர் |
2021 | ஸ்பெயின் அனைத்துலகப் போட்டி | கோ சின் வேய் | 21–14 21–19 |
வெற்றியாளர் |
- அனைத்துலக இறகுப் பந்தாட்டப் போட்டி
- அனைத்துலகத் தொடர் இறகுப் பந்தாட்டப் போட்டி
- அடுத்த அனைத்துலக இறகுப் பந்தாட்டப் போட்டி
இன்று மலேசியாவில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நட்சத்திர இறகுப் பந்தாட்ட விளையாட்டு வீரராக கிசோனா திகழ்கிறார். திண்ணைத் தாண்டி வா, விண்ணைத் தாண்டிப் போகலாம் எனும் வாசகம் அவர் அடிக்கடி சொல்லும் வாசகமாகும்.[10][11]
மேலும் காண்க
கிசோனா செல்வதுரையின் படங்களும் பேட்டியும்
மேற்கோள்
- ↑ 1.0 1.1 "Kisona Selvaduray: Clinched the gold medals at the 2017 and 2018 Malaysia International Series" (in en). 31 March 2021. https://sportsmatik.com/sports-stars/kisona-selvaduray-3109. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "KISONA Selvaduray Profile". https://bwfbadminton.com/player/92014/kisona-selvaduray. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "Kisona eyeing first individual title". The Star (Malaysia). http://www.thestar.com.my/sport/badminton/2013/09/10/kisona-eyeing-first-individual-title/.
- ↑ "National shuttler Kisona Selvaduray became a household name last year when she won the gold medal at the ladies singles’ event in the 2019 SEA Games, making Malaysia beam with pride.". 12 May 2020. https://varnam.my/featured/2020/21110/exclusive-kisona-selvaduray-talks-about-the-trials-and-tribulations-of-badminton/. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "Kisona Selvaduray | BAM" (in en) இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220128082429/https://bam.org.my/player/kisona-selvaduray-0. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ Fabian Peter (14 May 2017). "Badminton: Kisona earns maiden international title in Indonesia". New Straits Times. https://www.nst.com.my/sports/badminton/2017/05/239209/badminton-kisona-earns-maiden-international-title-indonesia.
- ↑ 7.0 7.1 7.2 Selan, Siva (7 October 2021). "Kisona is the youngest in her family and she has two brothers and a sister. An interesting fact about her family members is that all of them love the sport and have actually participated in tournaments.". https://thesmartlocal.com/malaysia/kisona-selvaduray/. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "Kisona Selvaduray Talks About the Love of Her Life, Badminton". 12 May 2020. https://varnam.my/featured/2020/21110/exclusive-kisona-selvaduray-talks-about-the-trials-and-tribulations-of-badminton/. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "மலேசியப் இறகுப் பந்தாட்ட வானில் பூத்திருக்கும் தாரகைகள்!" (in ta-IN). 19 January 2022. https://malaysiaindru.my/197881. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ KumaraN, குமரன். "பெண்களைக் கொண்டாடும் ஆஸ்ட்ரோவின் பெண்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி | அநேகன்". https://www.anegun.com/?p=45229. பார்த்த நாள்: 25 March 2022.
- ↑ "இந்தியப் பெண்மணி கிசோனா செல்வதுரை. இவர் ஒரு மலேசிய பூப்பந்து வீரர். 2013 ஆம் ஆண்டு ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இவர் வெண்கலப் பதக்கம் வென்றவர்.". https://tamilmalar.com.my/%E0%AE%9A%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/. பார்த்த நாள்: 25 March 2022.[தொடர்பிழந்த இணைப்பு]