கார்த்திகி கோன்சால்வெசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கார்த்திகி கோன்சால்வெசு
Kartiki Gonsalves
Kartiki Gonsalves Portrait.jpg
கோன்சால்வெசு 2022 ஆம் ஆண்டு
பிறப்புநவம்பர் 2, 1986 (1986-11-02) (அகவை 38)
படித்த கல்வி நிறுவனங்கள்ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரி,
லைட் அண்ட் லைஃப் அகாதமி, புகைப்படக் கலைஞர், ஊட்டி, இந்தியா
பணி
  • திரைப்பட இயக்குநர்
  • திரைப்படத் தயாரிப்பாளர்
  • புகைப்படக்கலைஞர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தி எலிபெண்ட் விசுபெரர்சு (2022ஆம் ஆண்டு ஆவணகுறும்படம் இயக்குநர்)
பெற்றோர்ஏ. திமோதி கோன்சால்வெசு
பிரிசில்லா டேப்லி கோன்சால்வெசு
வலைத்தளம்
www.kartikigonsalves.com

கார்த்திகி கோன்சால்வெசு (பிறப்பு: நவம்பர் 2, 1986, ஊட்டி) என்பவர் இந்திய ஆவணப்படத் தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார். இவர் 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை வென்ற தி எலிபெண்ட் விசுபெரர்சு என்ற ஆவணப்படத்தை இயக்கினார். இவர் இயற்கை மற்றும் வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். கோன்சால்வெசு இமேஜரி இந்தியாவின் கைவினைஞராக சோனியால் அங்கீகரிக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

பெற்றோர் பிரிசில்லா மற்றும் திமோதி

நியூயார்க்கின் பிங்காம்டனைச் சேர்ந்த திமோதி ஏ. கோன்சால்வெசு மற்றும் பிரிசில்லா டேப்லி கோன்சால்வ்சின் இளைய மகள் கார்த்திகி. இவருக்கு டானிகா கோன்சால்வெசு என்ற மூத்த சகோதரி உள்ளார்.[1] இவர் தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கு உட்பட்ட ஊட்டியில் வளர்ந்தார்.[2]

கோன்சால்வெசு கோயம்புத்தூரில் உள்ள டாக்டர் ஜி. ஆர். தாமோதரன் அறிவியல் கல்லூரியில் பயின்றார். ஊட்டியில் உள்ள லைட் & லைப் அகாதமியில் புகைப்படக் கலையில் கவனம் செலுத்தி படிப்பைத் தொடரும் முன் 2007-ல் பட்டம் பெற்றார்.

தொழில்

கோன்சால்வெசு ஆவணத் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் ஆவார்.[3] இவர் அனிமல் பிளானட் மற்றும் டிஸ்கவரி தொலைக்காட்சியில் படக்கருவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.[4] இவர் குனீத் மோங்கா[5] மற்றும் அச்சின் ஜெயின் தயாரித்து நெற்ஃபிளிக்சில் திரையிடப்பட்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்[3] என்ற ஆவணப்படத்தின் இயக்குநர் ஆவார்.[6] இந்த 41 நிமிட ஆவணப்படம் கோன்சால்வெசு வளர்ந்த இடத்திலிருந்து 30 நிமிட பயண தூரத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் தயாரிக்கப்பட்டது.[2]

மார்ச் 13, 2023 அன்று, இந்தத் திரைப்படம் 95வது அகாதமி விருதுகளில் சிறந்த ஆவணக் குறும்படத்திற்கான அகாதமி விருதை வென்றது. இப்பிரிவில் இந்த விருதை வென்ற முதல் இந்தியத் திரைப்படம் இதுவாகும்.[5]

படிமம்:Kartiki Priscilla Gonsalves Oscar Dolby LA Mar23 IMG 8335.jpg
95வது அகாதமி விருதுகளில் கார்த்திகி மற்றும் பிரிசில்லா கோன்சால்வ்சு

கார்த்திகி கோன்சால்வெசு 2020 முதல் இமேஜரி இந்தியாவின் சோனி கைவினைஞர் ஆவார். இயற்கை மற்றும் சமூக ஆவணப்படங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.[7] இவர் இயற்கை மற்றும் வனவிலங்கு புகைப்படம் எடுத்தல் பற்றிய பயிற்சிப் பட்டறைகளை நடத்துகின்றார்.[8] மேலும் பெங்களூர் மற்றும் மைசூர் நகரத்திற்குச் சுற்றுலா சேவையினை நடத்துவதோடு, பயணம் மேற்கொள்வதிலும் ஆர்வமிக்கவர்.

கோன்சால்வெசு ஒரு பன்னாட்டு பாதுகாப்பு புகைப்பட சகாவாக உள்ளார்.[9]

விருது ஆண்டு பரிந்துரைக்கப்பட்ட பணி வகை விளைவாக வார்ப்புரு:Reference heading
நியூயார்க்கு திரைப்பட விருது 2022 தி எலிபெண்ட் விசுபெரர்சு குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது [10]
95வது அகாதமி விருதுகள் 2023 தி எலிபெண்ட் விசுபெரர்சு சிறந்த குறும்படம் (ஆவணப்படம்) Won

பிற விருதுகள்

  1. 2023. தி இந்து. உலகப் பெண் 2023

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Priscilla and Timothy Gonsalves". பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
  2. 2.0 2.1 Chatterjee, Saibal (23 February 2023). "How Kartiki Gonsalves Made Oscar-Nominated Documentary The Elephant Whisperers: "Fell In Love With Raghu"". என்டிடிவி. Archived from the original on 2023-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  3. 3.0 3.1 Hill, Libby (2023-02-27). "Oscar-Nominated Doc Shorts Directors Tell Big Stories (Video)". The Wrap (in English). Archived from the original on 2023-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  4. Bharat, Divya (2023-03-02). "Most of my life has been spent in Ooty and jungles: Kartiki Gonsalves if it took 15 to 20 years to make The Elephant Whispers". Divya Bharat (in English). Archived from the original on 2023-03-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  5. 5.0 5.1 "The Elephant Whisperers scripts history with 1st Oscar for an Indian production, Guneet Monga says 'two women did it'". Hindustan Times (in English). 2023-03-13. பார்க்கப்பட்ட நாள் 2023-03-13.
  6. Katie Reul, Documenting Change. Variety, [s. l.], v. 359, n. 5, p. 23, 2023. Disponível em: https://search.ebscohost.com/login.aspx?direct=true&db=f6h&AN=161981277&site=eds-live&scope=site. Acesso em: 10 mar. 2023.
  7. "Kartiki Gonsalves". Sony Alpha Community. 2020. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
  8. Nair, Gayatri; Gonsalves, Kartiki (9 April 2022). "Up Your Photography Game with iPhone 13". Aptronix. பார்க்கப்பட்ட நாள் 22 November 2022.
  9. "Meet the new Associate Fellows of iLCP". International League of Conservation Photographers (in English). Archived from the original on 2023-03-10. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  10. "Shortlist Shorts: Change Makers". Doc NYC. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.


வெளி இணைப்புகள்