காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருள்மிகு ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கிருஷ்ணகிரி
அமைவிடம்:சென்னை முதன்மைச் சாலை, காட்டிநாயனப்பள்ளி, கிருஷ்ணகிரி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிருஷ்ணகிரி
மக்களவைத் தொகுதி:கிருஷ்ணகிரி
கோயில் தகவல்
மூலவர்:சுப்ரமணியர் (வள்ளி, தெய்வாணையுடன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கோயில்களின் எண்ணிக்கை:இரண்டு
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]
காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முகப்புத் தோறறம்

காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சநேயர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், காட்டிநாயனப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு

இக்கோயில் போகர் குன்றின் அடிவாரத்தில் ஏறக்குறைய ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோயிலின் முகப்பில் அகன்ற மண்டபம் அமைந்துள்ளது. இந்த ஒரே கோயிலுக்குள் முருகனுக்கும், பெருமாளுக்கும் தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதில் சுப்ரமணியர் (வள்ளி, தெய்வாணையுடன்) சன்னதிக்கு எதிரில் கொடிக்கம்பமும், வரதராசபெருமாள் சந்நிதிக்கு எதிரில் கருடகம்பமும் அமைந்துள்ளது. இந்த இரண்டு சந்நிதிகளும் தனித்தனி வாயில்களுடன் உள்ளன. மேலும் இங்கு விநாயகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் எதிரில் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. அதில் நிறைய திருமணங்கள் நடத்தப்படுகின்றன.[2] இங்குக் கோயில் குளம், கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. தை மாதம் முக்கிய திருவிழாவும், தேரோட்டமும் நடைபெறுகிறது. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது.

அமைவிடம்

இக்கோயில் கிருஷ்ணகிரி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

அன்னதானம்

இக்கோயிலில் தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தின்படி நாள்தோறும் 25 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
  2. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 112–114. {{cite book}}: Check date values in: |year= (help)
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.