காசில்
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
யு.என்.எசு பி07720
| |
| இனங்காட்டிகள் | |
| 12665-05-3 | |
| பண்புகள் | |
| வெள்ளி (71-73%) தாமிரம் (27-29%) | |
| தோற்றம் | வெள்ளியைப் போன்ற உலோகம் |
| அடர்த்தி | 10.0 |
| உருகுநிலை | 780 °C (1,440 °F; 1,050 K) |
| வெப்பக் கடத்துத்திறன் | 371 வாட்சு/மீட்டர்.கெல்வின் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
காசில் (CuSil) என்பது தாமிரம், வெள்ளி ஆகிய தனிமங்கள் சேர்ந்த கலப்புலோகத்தின் வர்த்தகப் பெயராகும். காப்பர் என்ற ஆங்கிலச் சொல்லின் முதலும் சில்வர் என்ற ஆங்கிலச் சொல்லின் முதலும் சேர்த்து இப்பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. 72% வெள்ளியும் 28% தாமிரமும் இக்கலப்புலோகத்தின் இயைபாகும். மோர்கான் அட்வான்சுடு மெட்டீரியல்சு என்ற நிறுவனம் இதை தயாரித்து விற்பனை செய்கிறது.
நல்லுருகற் கலப்புலோகமான இதை வெற்றிடப் பற்றாசிடலில் பயன்படுத்துகிறார்கள்[1]. காசில் கலப்புலோகமும் காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகமும் வெவ்வேறானவையாகும். காசில்-ஏ.பி.ஏ கலப்புலோகத்தின் இயைபு வெள்ளி-63.0%, தாமிரம்-35.25% தைட்டானியம்-1.75% ஆகும்.
மேற்கோள்கள்
- ↑ Nafi, A.; Cheikh, M.; Mercier, O. (21 June 2013). "Identification of mechanical properties of CuSil-steel brazed structures joints: a numerical approach". Journal of Adhesion Science and Technology 27 (24): 2705–2713. doi:10.1080/01694243.2013.805640.