கழுகும் சிறுமியும்
8°07′53″N 31°24′41″E / 8.131315°N 31.411341°E
கழுகும் சிறுமியும் அல்லது போராடும் சிறுமி என்பது கெவின் கார்ட்டரினால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும். இது மார்ச் 26, 1993ல் நியூ யோர்க் டைம்சு இதழில் முதன்முதலில் வெளியானது. இப் புகைப்படத்தில் ஒரு நலிந்த, பஞ்சத்தில் வாடுகின்ற சிறுவன் (முதலில் அது ஒரு சிறுமி என நம்பப்பட்டது [1]) புகைப்படத்தின் முன்னணியில் நிலைகுலைந்து காணப்படுவதோடு, அவனுக்கண்மையில் சிறுவனை நோட்டமிட்டபடி ஒரு கழுகும் காணப்படுகின்றது. இச் சிறுவன், மார்ச் 1993ல், அரை மைல் தூரத்தில் சூடானின் அயோத் நகரில் அமைந்திருந்த ஐக்கிய நாடுகளின் உணவு வழங்கல் மையத்தை அடைய முயற்சித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மேலும், அவன் இறக்காமல் தப்பித்து விட்டதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளது. இப் புகைப்படம் 1994ல் புலிட்சர் சிறப்புப் புகைப்படத்துக்கான பரிசை வென்றது. இப் பரிசைப் பெற்ற நான்கே மாதங்களில் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கோள்கள்
- ↑ Rojas, Alberto (21 February 2011). "Kong Nyong, el niño que sobrevivió al buitre" (in Spanish). El Mundo இம் மூலத்தில் இருந்து 30 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170630053614/http://www.elmundo.es/elmundo/2011/02/18/comunicacion/1298054483.html. பார்த்த நாள்: 29 August 2017.