கலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கலி
நகரம்
சான்டியேகோ தெ கலி
கலி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கலி
சின்னம்
அடைபெயர்(கள்): "சொர்க்கத்தின் கிளை", "கொலொம்பியாவின் விளையாட்டுக்களின் தலைநகரம்", "கலி எ கலி, லோ தெமாசு எ லோமா", உலக சல்சா இசைத் தலைநகரம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
கலி நகரம் கலி நகராட்சிகளின் அமைவிடம்
நாடுகொலொம்பியா
மாவட்டம்வைய்யெ தெ காவ்கா
நிறுவப்பட்டது25 சூலை 1536
தோற்றுவித்தவர்செபாஸ்தியன் தெ பெலால்கசார்
அரசு
 • மேயர்ரோட்ரிகோ ஜியுரெரோ வெலாசுகோ
பரப்பளவு
 • நகரம்564 km2 (218 sq mi)
ஏற்றம்997 m (3,271 ft)
மக்கள்தொகை (2012)[1]
 • நகரம்2,294,653
 • தரவரிசைமூன்றாவது
 • அடர்த்தி4,100/km2 (11,000/sq mi)
 • பெருநகர்3,200,000 (2,012)
இனங்கள்Caleño
நேர வலயம்கொலொம்பியா நேரம் (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு+57 2
HDI (2010)0.89 – மிக கூடுதல்
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம் (எசுப்பானிய மொழி)

சான்டியேகோ தெ கலி (Santiago de Cali, எசுப்பானிய ஒலிப்பு: [sanˈtjaɣo ðe ˈkali]), வழமையாக குறிப்பிடப்படுவது கலி, கொலொம்பியாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகரம். இது வைய்ய தெ காவ்கா மாவட்டத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட கலி கொலொம்பியா நாட்டின் மூன்றாவது பெரிய மாநகரமாக உள்ளது. கொலொம்பியாவின் முதன்மையான பண்பாட்டு, பொருளியல் மையமாக விளங்கும் கலி தனது புவியியல் அமைவிடத்தால் நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. இது, எசுப்பானிய குடிமைப்படுத்துநர் செபாஸ்தியன் தெ பெலால்கசாரால் சூலை 25, 1536இல் நிறுவப்பட்டது.

இந்த நகரம் கொலொம்பியாவின் முதன்மை விளையாட்டு மையமாக விளங்குகிறது. இங்கு 1971இல் அமெரிக்காக்களுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன; 2013ல் உலக விளையாட்டுகள் நடைபெற உள்ளன. 2014இல் உலக மிதிவண்டி தடகளப் போட்டியும் 2015இல் உலக அமெச்சூர் தடகள கூட்டமைப்பின் உலக இளைஞர் போட்டிகளும் இங்கு நடந்தேற உள்ளன.

மேற்சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=கலி&oldid=14099" இருந்து மீள்விக்கப்பட்டது