கதிர்காமு ரத்தினம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
கதிர்காமு ரத்தினம் |
---|---|
பிறந்ததிகதி | ஏப்ரல் 6, 1928 |
இறப்பு | மே 14, 2005 |
கதிர்காமு ரத்தினம் (ஏப்ரல் 6, 1928 - மே 14, 2005) ஈழத்து இசை நாடகக் கலைஞர். பல நாடகங்கள் நெறியாள்கை செய்தார். இவர் நடித்த நாடகங்களில் ஏற்ற பெண் பாத்திரங்களுக்காக ரசிக்கப்பட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆரியாலையில் ஏப்ரல் 6, 1928-ல் பிறந்தார். கட்டிட ஒப்பந்தக்காரராக தொழில் புரிந்தார். ரத்தினத்தின் மாமனார் செல்லக்கண்டு நாடகப் பாடல்கள் எழுதுபவர். ரத்தினத்தின் சகோதரர்கள் ஆசிரியர் பாலசிங்கம், செல்லத்தம்பி, மருமகன் வரதராசா ஆகியோர் நாடகக்கலை வல்லுனர்கள், இசைக் கலைஞர்கள்.
கலை வாழ்க்கை
கதிர்காமு ரத்தினம் ’அரியாலை கலைமகள் நாடாசபாவில்’ சேர்ந்து நீலன் செல்லக்கண்டுவை குருவாகக் கொண்டு இசை நாடகத்துறையில் தன் பயணத்தைத் தொடங்கினார். பல நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். நாடகங்கள் பல நெறியாள்கை செய்தார். நடிகமணி வைரமுத்துவுடன் இணைந்து மயானகாண்டத்தில் சந்திரமதியாக இரண்டாயிரம் மேடைகளில் ஏறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அரிச்சந்திரன், சத்தியவான் சாவித்திரி, நல்லதங்காள், ஸ்ரீவள்ளி, ஞானசௌந்தரி, கண்ணகி, சாரங்கதரன் முதலிய இசைநாடகங்களில் நடித்தார். ஞானசௌந்தரி, பண்டாரவன்னியன், அரிச்சந்திரா, வள்ளி திருமணம், நந்தனார், பிரகலாதன் போன்ற நாடகங்களுக்கு நெறியாள்கை செய்தார்.
காங்கேசன்துறை 'வசந்தகான சபாவும் அரியாலை கலைமகள் நாடக சபாவும் பல காலம் இணைத்தே செயல்பட்டு வந்தன. கலைமகள் நாடக சபாவின் தயாரிப்பிலான ’ஆரியமாலா’, ’பதவி மோகம்’, 'வள்ளி திருமணம்’, 'சத்தியகுமார்’, ’அமரநாத்’ போன்ற பல நாடகங்களுக்கு வசந்தகானசபா நடிகர்கள் சேர்ந்து நடித்தும், வாத்தியங்கள் இசைத்தும் பங்காற்றினார். வசந்தகானசபா நாடகங்களிலும் கலைமகள் நாடகசபாவினர் பங்கேற்றது ரத்தினத்தின் முயற்சியால் நடந்தது.
இணைந்து நடித்த சமகாலத்தவர்கள்
- நடிகமணி வி.வி.வைரமுத்து
- அல்லாயூர் தம்பிஜயா
- வி. நற்குணம்
- குருநகர் பைக்கிரி சின்னத்துரை
- வதிரி அண்ணாச்சாமி
- வி.செல்வரத்தினம்
- தைரியநாதன்
- பி. சண்முகலிங்கம்
- ராமன் மார்க்கண்டு
- கவிஞர் ஐயாத்துரை
- வி.என். செல்வராசா
- அரியாலை பி. சண்முகலிங்கம்
- வி.கே. பால சிங்கம்
மறைவு
- கதிர்காமு ரத்தினம் மே 14, 2005 ல் காலமானார்.
விருதுகள்
- 1963-ல் வசாவிளான் மத்திய கல்லூரி அதிபரிடம் "சோக சோபித சொர்ணக் கவிக்குயில்" பட்டம் பெற்றார்.
- 1984-ல் அரியாலை ஸ்ரீ கலைமகள் ஜனசமூக நிலையம் பாராட்டிக் கௌரவித்தது.
- 1993-ல் அரியாலை ஜனசமூக நிலைய காசிப்பிள்ளை அரங்கில் "பன்டாரவன்னியன்" நாடகத்தை நெறியாள்கை செய்தததற்காக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
- தென்னிந்திய நடிகர் குலதெய்வம் புகழ் சின்னக் கலைவாணர் ராசகோபாலின் தலைமையின் கீழ் நடித்து "ஈழத்து கண்ணம்மா" பட்டத்தைப் பெற்றார்.
- கண்டி, பேராதனை மண்டபங்களில் துணைவேந்தர் சு. வித்தியானந்தன் அவர்களால் பாராட்டார் .
இசைநாடகங்கள்
- அரிச்சந்திரா
- சத்தியவான் சாவித்திரி
- நல்லதங்காள்
- ஸ்ரீவள்ளி
- ஞானசௌந்தரி
- கண்ணகி
- சாரங்கதரன்
நெறியாள்கை செய்த நாடகங்கள்
- ஞானசௌந்தரி
- பண்டாரவன்னியன்
- அரிச்சந்திரா
- வள்ளி திருமணம்
- நந்தனார்
- பிரகலாதன்