கதிரவன் கிருட்ணமூர்த்தி
Jump to navigation
Jump to search
கதிரவன் கிருட்ணமூர்த்தி கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று, பின்னர் ஐபிஎம் நிறுவனத்திலும், மாக்சிம் (Maxxim) நிறுவனத்திலும் பணியாற்றிய பொறியியலாளர். இவர் கம்பியில்லா மின்தொடர்பு தொழில்நுட்பத்தில் பல கண்டுபிடிப்புகள் செய்துள்ளார், சில காப்புரிமங்களும் பெற்றுள்ளார்[1]. தொலைத்தொடர்பு, குறிகை முறைவழியாக்கம் போன்ற துறைகளைப் பற்றி தமிழில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவருடைய சில தொழில்நுட்பக் கட்டுரைகள் துறை தொடர்பான ஆங்கில இதழ்களில் வெளியாகியுள்ளன. இவர் தற்போது ஐக்கிய அமெரிக்காவில் வசிக்கிறார்.
வெளியிட்ட நூல்கள்
- அடிப்படை ரேடியோ தொடர்பாடல் - அடையாளம் பதிப்பகம் (2011)
தமிழ்நாடு சிறந்த நூலாசிரியர் பரிசு
இவர் எழுதிய “அடிப்படை ரேடியோ தொடர்பாடல்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசுகளில் பொறியியல், தொழில்நுட்பம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.