கணபதி, கோயம்புத்தூர்
கணபதி, கோயம்புத்தூர் கணபதி | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°02′10″N 76°58′42″E / 11.036060°N 76.978360°ECoordinates: 11°02′10″N 76°58′42″E / 11.036060°N 76.978360°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | படிமம்:TamilNadu Logo.svg தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம் |
ஏற்றம் | 441 m (1,447 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 641006 |
தொலைபேசி குறியீடு | +91422xxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | கோயம்புத்தூர், காந்திபுரம், ஆவாரம்பாளையம், கவுண்டம்பாளையம், துடியலூர், சரவணம்பட்டி |
மாநகராட்சி | கோயம்புத்தூர் மாநகராட்சி |
கணபதி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கோயம்புத்தூர் நகரின் புறநகர்ப் பகுதி ஆகும். இது நகரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குள் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதி இது. இந்த இடத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலின் காரணமாக நகரத்தில் உள்ள இந்த பகுதிக்கு அதன் பெயர் வந்தது.[1]
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 441 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கணபதி ஊரின் புவியியல் ஆள்கூறுகள் 11°02'09.8"N 76°58'42.1"E (அதாவது, 11.036060°N 76.978360°E) ஆகும்.
அருகிலுள்ள ஊர்கள்
கோயம்புத்தூர், காந்திபுரம், சங்கனூர், சரவணம்பட்டி, கவுண்டம்பாளையம், நல்லாம்பாளையம், மணியகாரன்பாளையம், ஆவாரம்பாளையம், துடியலூர், டாடாபாத் ஆகியவை கணபதிக்கு அருகில் அமைந்துள்ளவை.
பூ மார்க்கெட்
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள மொத்த பூ மார்க்கெட்டில் ஏற்படும் கூட்ட நெரிசலினாலும், பூக்கள் விலையைக் கட்டுப்படுத்தவும், கணபதியிலும் மற்றும் சில இடங்களிலும் பூ மார்க்கெட் கிளைகளை ஆரம்பிக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
மாவட்டங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கட்டுமானங்களுக்கான திட்ட அனுமதியை விரைவுபடுத்தவும் பெருநகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்கப்படுகின்றன. அவ்வகையில் கோயமுத்தூர் பெருநகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட 118 வருவாய் கிராமங்களில், கோவை வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட கணபதி பகுதியும் ஒன்று.[2]
கல்வி - பள்ளிகள்
அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் S. E. S. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஆகியன இங்குள்ள பிரபலமான பள்ளிகள்.
மருத்துவம்
கோவையில் பிரபலமான K G மருத்துவமனை, 24 மணி நேரமும் செயல்படும் 25 மருத்தவத் துறைகள் கொண்ட K G சிறப்பு மையம் (K G Speciality Center) ஒன்றை கணபதி பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.[3]
ஆன்மீகம் - கோயில்கள்
பழமையான புகழ்பெற்ற வேணுகோபால சுவாமி கோயில், கணபதி மற்றும் மரத்தடி மாரியம்மன் கோயில் ஆகியவை கணபதியிலுள்ள முக்கிய கோயில்கள்.
மேற்கோள்கள்
- ↑ "Ganapathy Locality". http://www.onefivenine.com/india/villages/Coimbatore/Coimbatore/Ganapathy.
- ↑ "கோவை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் 118 கிராமங்கள் அறிவிப்பு வெளியிட்டது தமிழக அரசு - Dinamalar Tamil News" (in ta). நவ 23, 2022. https://m.dinamalar.com/detail.php?id=3177234.
- ↑ Bureau, The Hindu (2022-11-20). "KG Specialty Center opened at Ganapathy in Coimbatore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/Coimbatore/kg-specialty-center-opened-at-ganapathy-in-coimbatore/article66161648.ece.