கடம்பனூர்ச் சாண்டிலியன்
Jump to navigation
Jump to search
கடம்பனூர்ச் சாண்டிலியன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 207 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பெயரில் உள்ளது.
பாடல் தரும் செய்தி
ஒடிந்து கிடக்கும் வளையல் போல் வானத்தில் பிறை தோன்றுகிறது. (அதைப் பார்த்து நான் மாதத்தை எண்ணிக் கணக்கிட்டுக்கொண்டிருக்கிறேன்.)
பாலை நிலத்தில் அவர் செல்கிறார். அங்கே பெண்யானையின் வருத்தத்தைப் போக்க ஆண்யானை மரத்தை ஒடித்து அதன் நாரைக் கையிலே வைத்துக்கொண்டு முழங்கும். (அதைப் பார்த்து என்னை நினைப்பார். தோழி! கவலை வேண்டாம் என்கிறாள் தலைவி)