க. கிருஷ்ணசாமி (மலேசிய எழுத்தாளர்)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
க. கிருஷ்ணசாமி (மலேசிய எழுத்தாளர்) |
---|---|
பிறந்ததிகதி | பிப்ரவரி 3 1940 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
க. கிருஷ்ணசாமி, (பிறப்பு: பிப்ரவரி 3 1940) மலேசியாவில் மூத்த எழுத்தாளரும், பதிப்பக உரிமையாளரும், முன்னாள் ஆசிரியருமாவார். எழுத்துறையில் இவர் திருநம்பி, பாண்டியன், தென்னவன் ஆகிய புனைப் பெயர்களில் அறியப்பட்டுள்ளார்.
எழுத்துத் துறை ஈடுபாடு
1957 முதல் எழுதி தமிழ் இலக்கியத்துறையில் முனைப்புடன் ஈடுபட்டும் வரும் இவர், இதுவரை சுமார் 80 சிறுகதைகளையும், 30 கட்டுரைகளையும், 100 ஓரங்க முழுநீள நாடகங்களையும், சில கவிதைகளையும் எழுதியுள்ளார்.
பணிகள்
மலேசியா தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் நீண்ட காலம் தேசியத் தலைவராக இருந்த இவர் மலேசிய இளைஞர்களை முன்னேற்றப் பணிகளுக்காக ஒன்று திரட்டுவதில் வெற்றி கண்டுள்ளார். இவர் ஒரு மேடை பேச்சாளர். இவரது பேச்சாற்றலினால் "சங்க நாதம்" என்னும் அடைமொழியை பெற்றுள்ளார். 'மாஜு ஜாயா' என்னும் இளைஞர் கூட்டுறவுக் கழகத்தைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். தற்போது சூரியா பதிப்பகத்தை நடத்தி வருகிறார்.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- "உள்ளக் கோயில்"
- "இலக்கியத் தேடல்"
நாடகங்கள்
- "மண்ணின் மைந்தர்கள்"
- "மாங்கனி"
கட்டுரை நூல்
- "இளைஞர் ஆற்றல்"
பரிசுகளும் விருதுகளும்
இவரின் மேற்குறித்த சேவைகளைக் கருத்திற்கொண்டு பல பரிசில்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார்.
- "சங்க நாதம்"
- "தமிழ்த் தென்றல்"
- "இளைஞர் திலகம்"
- "Tokoh Belia" மலேசிய இளைஞர் மன்றம்
- "முத்தமிழ்ச் சுடர்" தமிழ் நாடு மக்கள் இலக்கியக் கழகம்
- "AMN விருது" மலேசிய அரசாங்கம்