ஏ. பி. சண்முகம்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஏ. பி. சண்முகம் |
---|---|
பிறந்ததிகதி | நவம்பர் 11 1929 |
பிறந்தஇடம் | ஆத்திக்குளம் தமிழ் நாடு ,தஞ்சை மாவட்டம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
ஏ. பி. சண்முகம் (பிறப்பு: நவம்பர் 11 1929) தமிழ் நாடு தஞ்சை மாவட்டம் ஆத்திக்குளத்தில் பிறந்த இவர் ஆத்திக் குளம் ஆரம்பப் பள்ளியில் பயின்றார். பின்னர் மலேசியா கோலாலம்பூரில் குறளியக்கத்தில் இலக்கியப் பயிற்சி பெற்றார். 1959 வரை மலேசியாவிலிருந்து பின்பு சிங்கப்பூரில் புலம்பெயர்ந்தார்.
பதவிகள்
சிங்கப்பூர் தமிழர் இயக்கம், தமிழர் மரணநிதிச் சங்கம், தமிழர் சங்கம், தமிழர் சீர்திருத்தச் சங்கம், வெண்ணிலா கலையரங்கம், தமிழர் பேரவை போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்ததுடன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
இலக்கியப் பணி
1948 ல் எழுதத் தொடங்கிய இவர் கவிதை, நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை முதலிய துறைகளில் ஆர்வம் காட்டிவந்தார். ‘தூக்கிலிட்டால்” எனும் கவிதை இவரது முதல் படைப்பாகும். “எழுத்தாளனாகலாம்” எனும் இவரின் முதற்கட்டுரை 1951ல் தமிழ் முரசிலும், “கண்ணிருந்தும் கபோதி” எனும் இவரின் முதல் சிறுகதை தமிழ்நேசனிலும், “தர்மகர்த்தா” எனும்; முதல் நாடகம் தமிழ்நாட்டில் குடந்தையில் 1961ஆண்டிலும் வெளிவந்தன.
மேடையேறிய நாடகங்கள்
“வந்தனை செய்வோம்”; வெண்ணிலா கலை அரங்க ஏற்பாட்டில் விக்டோரியா அரங்கில் மேடையேற்றப்பட்டது. (1982ல்), “கொண்டாட்டம்”; சிங்கைக் குடியரசின் நாடக விழா 1984ல் கலாசார அமைச்சின் ஏற்பாட்டில் மேடையேற்றப்பட்டது.
எழுதியுள்ள நூல்கள்
- நாடக நூல்கள்
- தர்மகர்த்தா
- பயணம்
- ஓடியவன்
- திருவாளர்
- புதினங்கள்
- செல்வி
- நல்லகதி
- கலா
- சிறுகதைத் தொகுப்பு
- அகர ஓசை
- கட்டுரைத் தொகுப்புகள்
- பேசாத பேச்சு
- சங்கநாதம்
பெற்ற விருதுகளும், கௌரவங்களும்
- எது நாகரிகம் எனும் படைப்புக்கான (1955) முதல் பரிசு
- எழுத வந்தார் எனும் நாடகத்துக்கான மலேசியா நாடகப் போட்டியில் ஆறுதல் பரிசு
- நாடக வாணர்
- எழுத்துச் செம்மல்
- செந்தமிழ்ச் சிற்பி
உசாத்துணை
- சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் - சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக வெளியீடு