எம். சேனாதிபதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். சேனாதிபதி
எம். சேனாதிபதி
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். சேனாதிபதி
பிறந்ததிகதி 1939
பிறந்தஇடம் சென்னை, தமிழ்நாடு
அறியப்படுவது ஓவியம்

எம்.சேனாதிபதி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவர் நடிகர் சிவக்குமாரின் ஓவியக் கல்லூரி தோழரும் ஆவார். இவர் லலித் கலா அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். இவர் சென்னை சோழமண்டலம் ஒவிய கிராமத்தின் தலைவராவார். [1] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஓவியர்.

வாழ்க்கை வரலாறு

இவர் 1939 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். [2] 1965 ஆம் ஆண்டில் சென்னை அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் வரைதல் மற்றும் ஓவியம் குறித்த பட்டம் பெற்றார். 1959 முதல் 1965 வரை நடிகர் சிவக்குமாரும் இவருடன் சேர்ந்து ஓவியக்கல்லூரியில் பயின்றார். [2] இவருடைய திருமணம் 1965-ல் ஓவியக்கல்லூரி படிப்பு முடியும் முன்பாகவே ஏப்ரல் 19-ம் தேதி சைதாப்பேட்டையில் நடைப்பெற்றது. இவர் ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சோழமண்டலம் எனும் பகுதியில் வசித்தார். இவருக்கு சரவணன் என்ற மகனும், ஹேமலதா என்று மகளும் உள்ளனர். இருவரும் ஓவியங்கள். [2]

உலக ஓவியக்கலை ஆய்வு

1988 ஆம் ஆண்டு முதல் லண்டன், பிரான்ஸ், ஹாலந்து, பெல்ஜியம் மற்றும் மேற்கு ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்ல பிரிட்டிஷ் கவுன்சில் மானியம் தந்தது. அந்நாடுகளின் கலாச்சாரம், ஓவிய பண்பாடு ஆகிய ஆய்வை மேற்கொண்டார். 2006-லிருந்து 2016-க்குள் சீனா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, துபாய், அபுதாபி என பல நாடுகளுக்கும் சென்று அந்த நாட்டின் ஓவியக்கலை வளர்ச்சியை அறிந்துள்ளார்.

கண்காட்சி

பல ஓவியக் கண்காட்சிகளை சென்னை, பெங்களூரு, பம்பாய், கொல்கத்தா போன்ற நகரங்களில் பல முறை நடத்தியுள்ளார். 1987-1988 மற்றும் 1995 இல் லலித் கலா அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினராக இருந்தவர். [2] தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர். [2]

சேனதிபதி இந்தியக் கடவுள்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஓவியங்களுக்காக அறியப்படுகிறார். இந்திய தொன்மவியல் சார்ந்த பாடங்களை கலைவடிவாக எடுப்பதில் வல்லராக இருந்தார்.

விருதுகள்

  • 1988 பிரிட்டிஷ் கவுன்சில் கிராண்ட்
  • 1984-88 சீனியர் பெல்லோஷிப், கலாச்சாரத் துறை, இந்திய அரசு, புது தில்லி
  • 1981 ஆண்டு கண்காட்சி விருது.
  • 1981 - தமிழ்நாடு ஓவியம் நுண்கலை குரு விருது, சென்னை தமிழ்நாடு லலித் கலா அகாடமி.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. ஒவியங்கள் பாராட்டும் ஒவியர் எம்.சேனாதிபதி - எல்.முருகராஜ் - தினமலர் இதழ் - பதிவு செய்த நாள்: மே 05,2012
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 சித்திரச்சோலை: 27 உலகம் சுற்றிய ஓவியர்கள் - நடிகர் சிவக்குமார். 04 ஜனவரி 2021 இந்து தமிழ் திசை நாளிதழ்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=எம்._சேனாதிபதி&oldid=6783" இருந்து மீள்விக்கப்பட்டது