என். மனோகரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

என். மனோகரன் (N. Manoharan, வயது 57) காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த இவர் அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராவார். கண் பார்வையற்ற தமிழகத்தி்ன் முதல் தலைமை ஆசிரியர் இவரே.

கல்வி

5 வயதில் கண் பார்வையை இழந்த அவர் 8வது வயதில் பூந்தமல்லி அரசு பார்வையற்றறோர் பள்ளியில் சேர்ந்து 11ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் புதுமுக வகுப்பு, பி.ஏ. ஆங்கிலம் மற்றும் எம்.ஏ. ஆங்கிலம் படித்தார். இதையடுத்து ராயப்பேட்டை மெஸ்டன் கல்வியியல் கல்லூரியில் பி.எட். பட்டமும், அஞ்சல்வழி கல்வி மூலமாக எம்.எட் மற்றும் எம்.பில் பட்டங்களும் பெற்றார்.

ஆசிரியப் பணியில்

1984ம் ஆண்டு அவருக்கு முதுகலை ஆசிரியராக பணி நியமனம் வழங்கப்பட்டது. டிசம்பர் 3 1984 சேலம் மாவட்டம் மேட்டூர் அணை அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராக சேர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றினார். பின்பு திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 18 ஆண்டுகளும், காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 5 ஆண்டுகளும் பணியாற்றினார். பின்னர் அதே பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். தற்போது அரக்கோணம் தாலுகா மேலபுலம் அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவியேற்றுள்ளார்.

தமிழகத்தி்ன் கண் பார்வையற்ற முதல் தலைமை

கண் பார்வையற்ற தமிழகத்தி்ன் முதல் தலைமை ஆசிரியர் இவராவார்

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=என்._மனோகரன்&oldid=10257" இருந்து மீள்விக்கப்பட்டது