எ. சொ. அப்பாசாமி
எலிசபெத் சொர்னம் கொர்னேலியசு அப்பாசாமி (E. S. Appasamy-1878 - 1963), திருமதி பால் அப்பாசாமி அல்லது எ. சொ. அப்பாசாமி என்று தொழில் ரீதியாக அறியப்பட்டவர், ஓர் இந்தியச் சமூக சேவகர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் சென்னையில் இளையோர் மகளிர் கிறித்துவ சங்கத்தில் பணிபுரிந்தார். மேலும் 1920களில் இந்தியாவில் தேசியச் சமூக சேவையமைப்பின் தேசியச் செயலாளராக இருந்தார். 1924ல் பெண்களுக்காக வித்யோதயா பள்ளியை நிறுவினார்.
இளமை
எலிசபெத் சொர்ணம் (அல்லது சுவர்ணம்) கொர்னேலியசு 1878ஆம் ஆண்டில் சாலமன் துரைசாமி கொர்னேலியசு மற்றும் எசுதர் இராஜநாயகம் ஆகியோரின் பத்துக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். இவருடைய பெற்றோர் கிறித்தவர்கள். இவரது தந்தை பொதுப்பணித்துறையில் பணிபுரிந்தார். இவர் புனேயில் உள்ள எபிபானி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[1] மேலும் சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்த ஐந்தாவது பெண்மணி ஆவார். இவர் இங்கு இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]
தொழில்
அப்பாசாமி தேசியச் சேவை அமைப்பின் அகில இந்தியப் பெண் செயலாளராகவும், சென்னை, இளம் பெண்களின் கிறித்தவச் சங்க துணைத் தலைவராகவும் இருந்தார். சென்னையில் இவரது சகாக்களில் அரசியல்வாதி மோனா ஹென்ஸ்மேன் மற்றும் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி ஆகியோர் அடங்குவர்.[3] வேலை, பேச்சு, ஏற்பாடு, நிதி திரட்டுதல் என இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார்.[2] இவர் தனது சகோதரர் ஜே. ஜே. கொர்னேலியசுடன் 1914-இல் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்குச் சென்று விரிவுரைகளை நிகழ்த்தியுள்ளார்.[4][5] இவர் 1924-இல் பல்லாவரம் என்ற இடத்தில் பெண்களுக்கான கிறிஸ்தவ உறைவிடப் பள்ளியான வித்யோதயா பள்ளியை நிறுவினார். இவரது மகள் விமலா பள்ளியின் முதல் மாணவிகளில் ஒருவர்.[6]
1924ஆம் ஆண்டு வாசிங்டன், டி. சி.யில் நடந்த இளம் பெண்களின் கிறிததவச் சங்கத்தின் உலகக் குழுக் கூட்டத்தில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, "பெண்கள் கல்வியின் இலட்சியங்கள்" என்ற தலைப்பில் பேசுவதற்காகச் சிங்கப்பூருக்குச் சென்றார்.[7][8] 1928ஆம் ஆண்டில் இவர் பண்டித ரமாபாயின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.[9] மேலும் இவர் அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார்.[10][11] இவர் டிட்ராயிட், மிச்சிகன் நகரில் ஒரு பன்னாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
வாழ்க்கை மற்றும் குடும்பம்
சுவர்ணம் கொர்னேலியசு வழக்கறிஞரும் நீதிபதியுமான பால் அப்பாசாமியை மணந்தார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள்: மேரி விமலா, ஜான் பாசுகர், எசுதர் ஜெயா மற்றும் சாந்த் பால்.[2] சுவர்ணம் அப்பாசாமி தனது எண்பது வயதில் 1963இல் நங்கமங்கலத்தில் இறந்தார்.
பொருளாதார நிபுணர் ஜே. சி. குமரப்பா இவரது தம்பி. ஆயர் ஏ. ஜே. அப்பாசாமி, ஒரு முக்கிய இந்தியக் கிறித்தவ இறையியலாளர், இவரது மைத்துனர். இவருடைய குழந்தைகள் கல்வியாளர்களாக ஆனார்கள். இவரது மகள் விமலா அப்பாசாமி மவுண்ட் ஹோலியோக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.[12] 1936 முதல் 1965 வரை வித்யோதயா பள்ளியின் தலைமையாசிரியராக இருந்தார்.[6] மேலும் பள்ளிக்கு ஒரு பாடல் புத்தகம் எழுதியுள்ளார்.[13] மகள் ஜெயா அப்பாசாமி கலைஞர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர் மற்றும் அறிஞர் ஆவார்.[14] மகன் எஸ். பால் அப்பாசாமி 1960களில் இந்தியா மற்றும் இலங்கை இளம் பெண்களின் கிறிஸ்தவ சங்கத்தின் கல்வியாளராகவும் பிரதிநிதியாகவும் இருந்தார்.[15] இவரது பேத்தி மருத்துவர் சத்யா பிரிங்க்[16] கனடாவில் ஒரு சமூகவியலாளர் மற்றும் கொள்கை ஆலோசகர் ஆவார்.[17][18]
மேற்கோள்கள்
- ↑ "Mrs. P. Appasamy's Visit; Her Life and Work". https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/freepress19260430-1.2.36?ST=1&AT=search&k=Appasamy&P=2&Display=0&filterS=0&QT=appasamy&oref=article.
- ↑ 2.0 2.1 2.2 Lighted to Lighten the Hope of India: A Study of Conditions Among Women in India. https://archive.org/details/lightedtolighte00unkngoog.
- ↑ Sita Anantha Raman, ''Crossing Cultural Boundaries: Indian Matriarchs and Sisters in Service,'' Journal of Third World Studies 18, no. 2 (Fall 2001): 131–48. via ProQuest
- ↑ "Reception for Mrs. Appasamy". The Morning News: p. 2. 28 October 1914. https://www.newspapers.com/clip/39529379/e_s_appasamy_1914/.
- ↑ "Among the Clubs". The Pittsburgh Post: p. 4. 12 November 1914. https://www.newspapers.com/clip/39529464/e_s_appasamy_1914/.
- ↑ 6.0 6.1 "About Us". http://vidyodayaschools.in/vidyodayagovtschool/about-us.html.
- ↑ "Mrs. P. Appasamy's Visit". 29 April 1926. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/straitstimes19260429-1.2.99?ST=1&AT=search&k=Appasamy&QT=appasamy&oref=article.
- ↑ "Indian Lady's Lecture". 1 May 1926. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/maltribune19260501-1.2.29?ST=1&AT=search&k=Appasamy&P=3&Display=0&filterS=0&QT=appasamy&oref=article.
- ↑ Appasamy, Mrs Paul (1928). Pandita Ramabai. Christian Literature Society for India. https://books.google.com/books?id=RyIFjwEACAAJ.
- ↑ "Speaks at Missionary Meeting". 14 March 1928. https://www.newspapers.com/clip/39526802/swarnam_appasamy_1928/.
- ↑ "Missionary Society Hears Talk on India at Jubilee Meeting". 14 March 1928. https://www.newspapers.com/clip/39529280/e_s_appasamy_1928/.
- ↑ "Indian Women Making Fight for Progress". Democrat and Chronicle: p. 28. 18 September 1931. https://www.newspapers.com/clip/39528946/vimala_appasamy_1931/.
- ↑ Appasamy, Vimala (1952) (in en). Pujarini for the Pupils of Vidyodaya. Diocesan Press. https://books.google.com/books?id=5ai8tgAACAAJ.
- ↑ "Foreign Artist at SMS Tonight". Springfield Daily News: p. 23. 30 April 1963. https://www.newspapers.com/clip/39529046/jaya_appasamy_1963/.
- ↑ "County Y Edges Past Half Mark in Fund Drive". Hartford Courant: p. 11. 6 May 1961. https://www.newspapers.com/clip/39529544/paul_appasamy_1961/.
- ↑ "Purdue PhD Candidate Has High Hopes for Helping Indian Women". Journal and Courier: p. 18. 6 January 1971. https://www.newspapers.com/clip/39529745/satya_appasamy_brink_1971/.
- ↑ Sbertoli, Graciela (2019-01-15). "Potential ways to support basic skills policies - interview with Satya Brink" (in en). https://epale.ec.europa.eu/en/blog/potential-ways-support-basic-skills-policies-interview-satya-brink.
- ↑ Housing older people : an international perspective. Brink, S. (Satya), International Federation on Ageing.. New Brunswick, N.J., U.S.A.: Transaction Publishers. 1998. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7658-0416-6. இணையக் கணினி நூலக மையம்:37024895. https://www.worldcat.org/oclc/37024895.