உபதீசன்
Jump to navigation
Jump to search
| உபதீசன் | |
|---|---|
| உபதிஸ்ஸ நுவரவின் அரசன் | |
| ஆட்சி | கி.மு. 505 – கி.மு. 504 |
| முன்னிருந்தவர் | விசயன் |
| பண்டுவாசுதேவன் | |
| இறப்பு | தம்பபன்னி |
உபதீசன் ஆரிய இளவரசனான விசயன் என்னும் இலங்கை மன்னனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சனும் ஆவான். உபதிஸ்ஸ நுவர எனும் பெயரில் ஒரு நகரத்தைக் கட்டி அதற்குத் தன் பெயரையே சூட்டிக்கொண்டான்.
உபதீசன் இளவரன் விஜயனின் இறப்பின் பின்பாக சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். விஜயனுக்கு வாரிசுகள் இன்மையால் தென்னிந்தியாவில் இருந்து பண்டுவாசுதேவன் வரவழைக்கப்பட்டான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.