உதயை மு. வீரையன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

உதயை மு. வீரையன் (பிறப்பு: மே 1, 1942) என்பவர் ஒரு தமிழ் கவிஞர், நாடக ஆசிரியர் கட்டுரை எழுத்தாளராவார்.[1]

வாழ்க்கை

வீரையன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் உதயமார்த்தாண்டபுரத்தில் முத்துராமன், இராக்கம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் உதயமார்த்தாண்டபுரத்திற்கு அண்மையில் உள்ள பெருமழை எனும் ஊரில் வாழ்ந்த பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரமனாரிடம் உதவியாளராகப் பணியாற்றி அவரிடம் தமிழ் கற்றார். இவர் தொடக்க கல்வியை நாச்சிகுளத்திலும், நடுநிலைக் கல்வி இடையூரிலும், உயர்நிலைக் கல்வியை திருத்துறைப்பூண்டியிலும், கல்லூரிக் கல்வி திருவையாறு அரசர் கல்லூரியிலும், தொடர்ந்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் "இதழியல்' சான்றிதழும் பெற்றார்.[2] முதலில் பள்ளி ஆசிரியராக தம் பணியைத் தொடங்கிய இவர் கவிஞராக, நாடக ஆசிரியராக, கட்டுரையாளராகத் தமிழ் இலக்கிய உலகில் உள்ளார். இவர் பாரத ஸ்டேட் வங்கி இலக்கியப் பரிசு, பொற்கிழிக் கவிஞர் எனும் பட்டம், உலகத்தமிழ் மன்றப் பரிசு, பெரியார் கவிதைப் போட்டி பரிசு, எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.

படைப்புகள்

  • இவர் தன் 18 ஆம் வயதில் 'உணர்ச்சி கொள்வீர்' என்ற மரபு கவிதையைத் எழுதி பாரதிதாசனின் குயில் இதழில் வெளிவந்து பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • இவர் தினமணி நாளிதழில் எழுதிய ' சோழவளநாட்டின் சோகம்', ' கல்வியில் மாற்றம் காலத்தின் கட்டாயம்', போன்ற கட்டுரைகள் இவருக்குப் பெருமையைத் தேடித்தந்தன.

கவிதைத் தொகுப்புகள்

  • மூன்று முத்துக்கள்
  • அக்னிக் குஞ்சுகள்
  • தீர்ப்புகள் எழுதுகிறேன்
  • உனக்காகப் பாடுகிறேன்
  • கேள்விக் குறிகள்
  • தேடித் தேடி
  • வரமும் சாபமும்
  • நீதியின் முன்.

கட்டுரை நூல்கள்

  • பாதையும் பயணமும்
  • உரிமைக் குரல்
  • மானிட விடுதலை நோக்கி-2001

மேற்கோள்களும் உசாத்துணைகளும்

  • தினமணி நாளிதழ். 27.3.17
"https://tamilar.wiki/index.php?title=உதயை_மு._வீரையன்&oldid=3439" இருந்து மீள்விக்கப்பட்டது